உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

தொழில்துறை பற்றி

ஒப்பந்தங்களுக்குத் தயார் என்று முன்வந்திருக்கிறவர்கள்

எத்தனை பேர் என்றால்,

-

1. மோபில் எல்.என்.ஜி., அமெரிக்கா.

2. ஷெல் இண்டர்நேஷனல் காஸ், இங்கிலாந்து.

3. கோஸ்டல் காஸ் கார்ப்பரேஷன், அமெரிக்கா. 4. அமோகா பவர் ரிசோர்சஸ் கார்ப்பரேஷன், அமெரிக்கா. 5. பிலிப்ஸ் பெட்ரோலியம் கம்பெனி, அமெரிக்கா. 6. ஓக்ஸிடண்டல் நிறுவனம், அமெரிக்கா.

7. காஸ் டி'பிரான்ஸ், பிரான்ஸ்.

8. டோடல், பிரான்ஸ்.

9. நிசோ இவாய், ஜப்பான்.

10. மருபேனி கார்ப்பரேஷன், ஜப்பான்.

2 11. க்ளௌக் இஞ்சினியரிங் குரூப், ஆஸ்திரேலியா. 12. இம்ப்ரெப் எஸ்டிஎன் பிஹெச்டி, மலேசியா.

13. ரிலையன்ஸ் பவர் லிமிடெட், மும்பை.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதிலே, ஒப்பந்தத்தில் கலந்து கொள்வதிலே, ஆர்வத்தோடு அவர்கள் முன்வந்திருக் கின்றார்கள். அவர்களில் யாருக்காவது ஒருவருக்கு இந்தத் திட்டம் கிடைக்கும். ஒரு பிரமாண்டமான திட்டத்தைத் தமிழ்நாடு விரைவிலே அடைய இருக்கின்றது என்பதை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு இந்த அவையிலே தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

சென்னையைச் சுற்றியே பல பெருந்தொழில் திட்டங்கள் உருவாகி வருகின்றன என்ற ஒரு குறைபாடு இருந்து வருகின்றது. இட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தொழில் துறையின் சார்பில், ஹூண்டாய் கார் தொழிற்சாலை அமையும் திருப்பெரும் புதூருக்கு அருகில் 2,000 ஏக்கர் பரப்பில் ஒரு துணை நகரமும், போர்டு கார் தொழிற்சாலை அமையும் சிங்கப்பெருமாள்கோவில்