கலைஞரின் சட்டமன்ற உரைகள்
193
பகுதியில் 500 ஏக்கர் பரப்பில் ஒரு துணை நகரமும் அமைக்கப்படும். சென்னையிலேயே தொழில்கள் உருவாகின்றன என்பதை ஓரளவுக்கு மாற்றுவதற்காக இந்த இரண்டு துணை நகரங்களும் பயன்படுத்தப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி).
ஏற்கெனவே, 1989-90-91-ல் கழக அரசு பொறுப்பில் இருந்தபொழுது, தனியார் பின்னலாடைத் தொழில் வளாகம் ஒன்றை (பனியன் தொழில் வளாகம்) திருப்பூரை ஒட்டியுள்ள முதலிப் பாளையத்தில் அமைக்கத் திட்டம் வகுத்து, குறுகிய காலத்திலேயே அப்பணியும் முடிக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள். அதேபோல, அனைத்து வசதிகளும் கொண்ட தொழில் மையங்களைத் தனியார் சேர்ந்து உருவாக்க முயன்றால், அதற்கு அரசு நிறுவும் தொழில் வளாகங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தையும் வழங்கிடவும் திட்டமிடப்பட்டுள்ளது
எண்ணூர், தூத்துக்குடி, மேட்டூர், நெய்வேலி, வடசென்னை ஆகிய இடங்களில் அமைந்த அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் எரிசாம்பலைப் பயன்படுத்தி, செங்கல் போன்ற கட்டுமானப் பொருள் (Construction Blocks) தயாரிக்க முன்வரும் தொழில் முனைவோருக்குத் தக்க உதவிகள் செய்திட அரசு முடிவு செய்துள்ளது.
ஜெயங்கொண்டத்திலே நிலக்கரி நிறுவனம். இது நீண்டகாலமாக தீர்க்கப்படாதப் பெரிய பிரச்சினை. 1991-ல் பதிவு செய்யப்பட்ட ஜெயங்கொண்டம் நிலக்கரி நிறுவனம் முந்தைய அரசினுடைய அணுகுமுறை காரணமாகத் தொடங்கப்படாமல் அறிவிப்பு நிலையிலேயே இருக்கின்றது. ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படாமலேயே நிலக்கரியைத் தோண்டி எடுப்பதற்கும், தேவைப்படும் இயந்திரங்களை வழங்குவதற்கும் முந்தைய அரசில் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் இந்த அரசினால் ரத்து செய்யப்பட்டுவிட்டன. டெண்டர் கோராமல் அந்த அரசு ஜெயங்கொண்டம் நிலக்கரி நிறுவனத்துக்கான பணிகளை ஒப்படைக்க முன்வந்தபோது, இந்த அரசு பொறுப்பேற்றது. பின்னர் அந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆண்டொன்றுக்கு