உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

தொழில்துறை பற்றி

உரை : 7 :

நாள் : 14.05.1998

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தொழில் துறை மானியத்தின்மீது மாண்புமிகு உறுப்பினர்கள் வழங்கியுள்ள கருத்துக்களின் அடிப்படையிலும், தமிழகத்திலே தொழில் வளர்ந்துள்ள நிலையின் அடிப்படையிலும், சில கருத்துக்களை இங்கே கூறி, சில முக்கியமான அறிவிப்புக்களையும் தெரிவிக்க இருக்கின்றேன்.

விவாதத்தைத் தொடங்கி வைத்த மாண்புமிகு உறுப்பினர் திரு. ரங்கநாதன் அவர்கள், இதுவரையிலே அறிவிக்கப்பட்ட தொழில் துறைத் திட்டங்களை எல்லாம் நிறைவேற்றினீர்களா என்ற கேள்வி கேட்டு, அந்தப் பட்டியலை நான் இங்கே வெளியிட வேண்டிய அவசியத்தை எனக்கு உருவாக்கி இருக்கின்றார்கள். எனவே, அதுபற்றி என்னுடைய உரையிலே நான் விளக்க இருக்கின்றேன்.

நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் திரு. சுப்பராயன் அவர்கள் தொழில் வளர்ச்சிக்கு மின் உற்பத்திதான் அடிப்படையிலே மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் குறிப்பிட்டு, அதற்காக இந்த அரசு எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் எவை எவை, தேவைக்கு ஈடுகொடுக்கக்கூடிய அளவுக்கு மின் உற்பத்தியை நாம் செய்திருக்கிறோமா, ஏன் செய்யவில்லை என்ற வினாவினை அவர்களும் எழுப்பியிருக்கின்றார்கள்.

பல உறுப்பினர்கள் அவரவர்களுடைய தொகுதிக்கு, மாவட்டத்திற்குத் தேவையான தொழிற்சாலையைப் பற்றி இங்கே குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஒன்றிரண்டை மாத்திரம் நான் இங்கே சொல்வதால், மற்ற உறுப்பினர்களுடைய கோரிக்கைகளை எல்லாம் புறக்கணித்துவிட்டதாகப் பொருள் அல்ல