கலைஞரின் சட்டமன்ற உரைகள்
199
குறிப்பாக நம்முடைய இந்திய தேசிய லீக்கினுடைய தலைவர் திரு. லத்தீப் அவர்கள், சந்தனத் தொழிற்சாலை கேட்டு, பல ஆண்டுகாலமாக சங்கடத்தோடு இங்கே போராடி வருகின்றார்கள். எப்படியாவது அவருடைய ஆசையை நிறைவேற்றுவதற்காகவாவது, நட்டம் வந்தாலும் சரி, இலாபம் வந்தாலும் சரி, பரவாயில்லை என்ற அளவில் அதைத் தொடங்கிட இந்த ஆண்டு முயற்சி மேற்கொள்ளப்படும் என்பதை நான் அவருக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி).
நம்முடைய அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியி னுடைய தலைவர், திரு. சந்தானம் அவர்கள், தன்னுடைய தொகுதியில் தேங்காய் அதிகமாக உற்பத்தியாகிறது; தேங்காய்த் தொழில் அங்கே தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். அதுபற்றியும் அரசு பரிசீலித்து ஆவனச் செய்யும் என்று நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நம்முடைய ஒட்டப்பிடாரம் தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள், நூற்பாலை ஒன்று கேட்டு இருக்கின்றார்கள். அந்தத் தொகுதியிலே நூற்பாலை வைப்பதிலே உள்ள நன்மை, தீமைகள், சாத்தியக்கூறுகள், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள், கிடைக்கக்கூடிய இலாபம், பயன்பெறக்கூடிய வேலைவாய்ப்பு, அந்த வேலைவாய்ப்பைப் பெறக்கூடியவர்களுடைய எண்ணிக்கை, இவற்றை எல்லாம் ஆய்ந்து பார்த்து, நூற்பாலைதான் வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல், அந்த வறண்டு இருக்கின்ற பகுதியில் வேலை வாய்ப்பைத் தரக்கூடிய ஏதாவது ஒரு தொழிற்சாலையை உ உருவாக்க இந்த அரசு முன்வரும் என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்கின்றேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினர் மணி அவர்கள் இரப்பர் தொழிற்சாலையைப் பற்றி அடிக்கடி இந்த அவையிலே குறிப்பிட்டு, நானும், சென்ற ஆண்டு அதற்கான உறுதி அளித்து, நானே முன்நின்று அந்த முயற்சியிலே ஈடுபடுவேன் என்று உறுதி அளித்ததை, நல்லவேளையாக அவர் அதை இங்கே குறிப்பிட்டுக் காட்டவில்லை. ஆனால் எனக்கு நினைவு இருக்கிறது. நான் அவருக்கு விளக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு இரப்பர்