உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

“தம்மில் மெலியாரை நோக்கித்

தொழில்துறை பற்றி

தமதுடைமை அம்மா பெரிதென்று அகமகிழ்க!”

என்று காட்டப்படுகிற தத்துவப் பொன்மொழியை அரசியல் துறையில் இழுக்க வேண்டாம். சராசரி வருமானம் பிற மாநிலங்களில் எவ்வளவு உயர்வாக இருக்கிறது, தமிழகத்தில் எவ்வாறு இருக்கிறது என்பதை நான் சுட்டிக்காட்டுவது, நாம் எந்தளவு பின்தங்கிக் கிடக்கிறோம் என்பதை எண்ணி நம் தொழில் வளத்தையும், பொருளாதார வளத்தையும் பெருக்கிக் கொள்வதற்காகத்தான். "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்பது பேராசைக்காரனிடம் கூற வேண்டிய உபதேசமே தவிர, பெரும் பசிக்காரனிடம் சொல்லும் பழமொழியாக இருத்தல் கூடாது. “கிட்டாதாயின் வெட்டனமற” என்பதை டெல்லியைக் கேட்டுப்பார்த்து அவர்கள் தர மறுத்த பிறகு நீங்கள் கையாளும் அறிவுரையாகக் கொள்ளாமல் “முயற்சி திருவினையாக்கும்” என்ற முனைப்புடனும் "ஊழையுமுப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது ஏற்றுபவர்" என்று கனம் உறுப்பினர் ஈரோட்டார் கூறிய குறள் வழிக்கிணங்கவும் செயல்படவேண்டும் எனக் கூறுவேன். தமிழகத் தொழில்துறை வளர டெல்லியிடம் மேலும் போராடுங்கள்.

தொழில் வளர்ச்சிக்கு தொழிலாளருடைய நலன் மிக மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். தொழிலாளருடைய வளமும், தொழிலாளருடைய நலமும் பாதுகாக்கப்பட்டால்தான், அவர்களுடைய உரிமைகள் ஒழுங்காக அளிக்கப்பட்டால்தான், தொழிலாளர்களுடைய வாழ்வில் நிம்மதி இருந்தால்தான். தொழில் துறையில் நாம் எதிர்பார்க்கிற உற்பத்தி பெருகவும், நாடு பொருளாதாரத்தில் முன்னேறவும் வழிவகை காண முடியும். இந்தியாவில் மண்ணியல், சுரங்க இயல்,

கனி இயல் ஆகியவற்றிற்கான சங்கத்தின் அறிக்கை கூறுகிறது, இந்தியத் தொழிலாளிக்கும் வேறு நாடுகளில் இருக்கிற தொழிலாளிக்கும் உள்ள திறமையைப்பற்றி. அந்த அறிக்கையில், ஒரு நாளுக்கு ஒரு ஆங்கில நாட்டுத் தொழிலாளி 6 டன்னும், ஜெர்மானிய நாட்டுத் தொழிலாளி 8.99 டன்னும், அமெரிக்கத் தொழிலாளி 21.68 டன்னும், இந்திய தொழிலாளி 2.7 டன்னும்தான் அகழ்ந்து எடுக்கிறார்கள் என்று சுரங்க இயல், மண் இயல், கனி இயல் சங்கத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது. இதை நான் சொல்லுவதற்குக் காரணம், இந்தியக் தொழிலாளி ஏன் இந்த அளவுக்குத் திறமைக்