உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

209

ஒரு வரி விதிப்பார்கள் என்றெல்லாம் சொல்லி அதற்கு உடந்தையாக திரு. முரசொலி மாறன் இருந்தார் என்று சொல்லி, இருவரும் சேர்ந்து தமிழ்நாட்டு மக்களை, ஏன் இந்திய நாட்டு மக்களையே வேதனைப் படுத்தி விட்டார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால் ஊழலில் நிலைக்களமாக, லஞ்ச அவதாரமாக, தமிழ்நாட்டினுடைய தொழில் வளம் உள்ளிட்ட எல்லா வளங்களையுமே பாழ்படுத்திய ஒருவர், இந்தியாவினுடைய அமைச்சர்களாக இருந்தாலும் கூட, இந்தியாவிலே உள்ள மாநிலங்கள் அனைத்திற்கும் நன்மை செய்ய வேண்டும் என்பதோடு, சொந்த மாநிலம் இந்த மாநிலம் என்கிற எண்ணத்தோடு, தமிழ்நாட்டுக்குப் பல தொழில் வளங்களைத் தருவதற்கு நிதியும் தந்து, உரிமைகளும் தந்த திரு. சிதம்பரத்தையும், முரசொலி மாறனையும் குறை கூறியிருப்பது தமிழ்நாட்டிற்கு இவர்கள் செய்கின்ற பெரும் துரோகம் என்றுதான் நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி)

-

அவர்கள் - சிதம்பரமும், மாறனும் - ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று பேசவில்லை என்ற குறை அவர்களுக்கு இருக்கலாம். இப்பொழுது அமைச்சர்களாக மத்தியிலே இருப்பவர்களுக்கெல்லாம் நான் எல்லா அமைச்சர் களையும் சொல்லவில்லை - அ.தி.மு.க. அமைச்சர்களுக் கெல்லாம் மற்ற அமைச்சர்களெல்லாம் நம்மையும் திட்டுகிறார்கள், அவர்களுடைய வேலையையும் பார்க்கிறார்கள். இப்பொழுது திரு. வாழப்பாடி இராமமூர்த்தி என்று எடுத்துக் கொண்டாலும், திரு. ரங்கராஜன் குமாரமங்கலம் என்று எடுத்துக் கொண்டாலும், திரு. தலித் எழில்மலை என்று எடுத்துக் கொண்டாலும், ஏதோ சில நேரங்களில் நம்மைப் பற்றியும் பேசுகிறார்கள், அதே நேரத்தில் அவர்களுடைய இலாகா சம்பந்தமான வேலை களையும் கவனிக்கிறார்கள். மற்ற அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு அவர்களுடைய இலாகா சம்பந்தமான வேலையே இங்கே யிருக்கின்ற ஆட்சியைக் கவிழ்ப்பதுதான்; அம்மாவைக் காப்பாற்றுவதுதான். அந்த வேலையை அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். அதுபோன்ற வேலையிலே ஈடுபடாமல், நாட்டினுடைய வளத்திற்காக, நாட்டினுடைய மேன்மைக்காக,

8-க.ச.உ. (தொ.து.)