உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

தொழில்துறை பற்றி

தொழில் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்கள் என்பதற்காக இரண்டு அமைச்சர்களைக் குறை கூறி, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்ற அம்மையார் அவர்கள், இன்றைக்கும் பார்த்து ஒரு அறிக்கையை

வெளியிட்டிருக்கின்றார்கள்.

இவர்களைப் பற்றி நாடு என்ன நினைத்தது, நாட்டிலே உள்ள தொழிலதிபர்கள் என்ன எண்ணினார்கள், தொழில் வளர்ச்சியிலே அக்கறை கொண்ட ஏடுகள் என்ன எண்ணின என்பதற்காகத்தான் இந்த இரண்டையும் நான் இங்கே படித்துக் காட்டினேன்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பொதுத்துறை நிறுவனங்களில் நமக்கு மிகுந்த அக்கறை உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமேயானால், தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம், அரியலூர், ஆலங்குளம் இங்கே நிறுவப்பட்டது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில்.

தமிழ்நாடு மேக்னசைட், சேலம். தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் அந்தப் பொதுத் துறை நிறுவனம் நிறுவப்பட்டது

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம், அது அருமை நண்பர் எம்.ஜி.ஆர். காலத்திலே நிறுவப்பட்டது; பொதுத் துறை நிறுவனம். சதர்ன் ஸ்டிரக்சுரல்ஸ் நிறுவனம். பொதுத் துறை, தி.மு.க. ஆட்சியில் நிறுவப்பட்டது.

தமிழ்நாடு மினரல்ஸ் - கனிம நிறுவனம் (டாமின்), தி.மு.க. ஆட்சியில் நிறுவப்பட்டது.

தமிழ்நாடு உப்பு நிறுவனம், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நிறுவப்பட்டது.

தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்), திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நிறுவப்பட்டது.

தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவனம், அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் நிறுவப்பட்டது.

தமிழ்நாடு சர்க்கரைக் கழகம், திராவிட முன்னேற்றக் கழக

ஆட்சியில் நிறுவப்பட்டது.