உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

தொழில்துறை பற்றி

வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பணியாளர்கள் மாநிலத்திற்கு வருவதன் காரணமாக, அவர்களுடைய உறைவிடம், உணவு, பொழுதுபோக்கு முதலிய தேவைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது இன்றைய தேதியில் சென்னையில் மாத்திரம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் தங்கியிருக்கின்றார்கள். இத்தாலி, மெக்சிகோ, ஜப்பான், தாய்லாந்து, மற்றும் கொரியா உணவு வகைகளைத் தயாரிக்கும் பலதரப்பட்ட உணவகங்கள் சென்னையிலே தொடங்கப்பட்டு, நல்ல வர்த்தகங்கள் புரிந்து வருகின்றன. வெளிநாட்டினருடைய தேவைகளைப் பூர்த்திச் செய்ய மிகச் சிறந்த உறைவிடங்கள் தோன்றியுள்ளன. பன்னாட்டுப் பாடத் திட்டங்களை அளிக்கும் புதிய பள்ளிகளும் தொடங்கப் பட்டுள்ளன. மாநிலத்திலே வசிக்கும் வெளிநாட்டினருடைய பயண விருப்பம் காரணமாக சுற்றுலாத் துறையும் பயனடைகிறது. சுற்றுலா விரிவடைந்தால், அதன்மூலமாக அன்னியச் செலாவணி அதிகமாக ஒரு நாட்டுக்குக் கிட்டும் என்பது அனைவரும் அறிந்த பொருளாதார இலக்கணம். வெளிநாட்டு நேரடி முதலீட்டால் அதிக அளவில் வேலைவாய்ப்புகள், அதிகம் உற்பத்தி, பொருளாதாரம், உள்ளூர் பணியாளர்களுடைய திறமை உயர்வு, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக ஆதாரங்கள் மேம்பாடு ஆகியவை பெருகிட வாய்ப்பு ஆகிறது. இவ்வளவு சீலங்களையும் சொல்கின்ற காரணத்தால் சிச்கிக் கொள்வீர்களா என்று திரு. சுப்பராயன் கேட்கத் தேவையில்லை. சிக்கிக் கொள்ளாமலேதான் இவற்றை யெல்லாம், இந்தப் பயன்களையெல்லாம் நாம் அனுபவிக்க இருக்கின்றோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மின் திட்டங்களைப் பற்றி இங்கே திரு. சுப்பராயன் அவர்கள் சொன்னார்கள். மற்றவர்களும் அதைப்பற்றிப் பேசியிருக்கின்றார்கள். 900 கோடி ரூபாய்த் திட்ட மதிப்பீட்டில் சேலம் உருக்காலையிலே அமைய இருக்கின்ற ஒருங்கிணைந்த எஃகு உற்பத்தித் திட்டத்திற்கு மத்திய எஃகு அமைச்சகத் தினுடைய அனுமதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகின்றோம்.