கலைஞரின் சட்டமன்ற உரைகள்
233
மையத்திற்காக 1997-98ஆம் ஆண்டு பங்குத் தொகையாக தொடக்கத்தில் 5 கோடி ரூபாயை அரசு அளித்தது. 1998-99ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மேலும் 5 கோடி ரூபாயை இந்த மையத்திற்கு அரசு ஒதுக்கியுள்ளது.
'எல்காட்' நிறுவனத்தின், விற்பனையின் சாதனையை எடுத்துக்கொண்டால், 1995-96ஆம் ஆண்டு. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசில், அதனுடைய டர்ன்-ஓவர் 7.86 கோடி ரூபாய். 1997-98இல் 'எல்காட்'டினுடைய மொத்த விற்பனை டர்ன்-ஓவர்-38.79 கோடி ரூபாய். (மேசையைத் தட்டும் ஒலி) ‘எல்காட்'ன் நிகர இலாபம் 1995-96இல் ரூ. 2.71 இலட்சம். 1996-97இல் ரூ. 33.59 இலட்சம். 1997-98இல் 41/2 கோடி ரூபாய். (மேசையைத் தட்டும் ஒலி).
-
மற்றொரு அறிவிப்பு. 'Software' பற்றியது. இப்படி 'Software' 'Software' என்று சொல்லும்போது, பல பேருக்கு என்ன என்று தெரியாது. எனக்குக்கூட ஆரம்பத்திலே அந்தக் காலத்திலே புரியாமல் இருந்தது. என்ன இது 'Software', 'Software' என்று சொல்லுகிறார்களே என்று. ஒருவரிடம், பையன் என்ன செய்கிறான் என்று கேட்டால் 'Software' தொழிலில் இருக்கிறான் என்பார். 'Hardware' 'Software' என்று சொல்லுகிறோம். 'Software' என்றால் என்ன என்பதை - மன்னித்துக்கொள்ள வேண்டும், உறுப்பினர்கள் யாருக்காவது தெரியாமல்கூட இருக்கும். இருந்தாலும், ஆங்கிலப் படம் பார்ப்பது மாதிரி, என்னோடு சேர்ந்து அவர்களும் தலையாட்டக் கூடும். 'Software' என்றால் என்ன என்பதைச் சொல்லவேண்டுமென்றால்
கணினி மற்றும் அதைச் சார்ந்த Monitor, Key Board, Printer ஆகியவை 'Hardware' என்று சொல்லப்படுகிறது. இந்தக் கணினியை இயக்குவதற்காகக் கொடுக்கப்படுகின்ற தொகுப்புக்குத்தான் 'மென்பொருள்' என்று பெயர். தற்போது மென்பொருள் துறையில், உலகத்திலேயே பரபரப்பாகப் பேசப்படுவது, 2000-ஆவது ஆண்டு -Y2 K-1 பிரச்சினையாகும்.
கடந்த 30 ஆண்டுகளாக, கணினி மொழியிலே இடச் சிக்கனத்தைக் கருதி, ஆண்டுகளைக் குறிப்பிடும்போது, இரண்டு இலக்கங்களை மாத்திரம்தான் பயன்படுத்துகிறார்கள். அது