உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

தொழில்துறை பற்றி

ஆபத்தாகப் போய்விடுமோ என்ற பயம் இப்போது வந்திருக்கிறது. நான் கோப்புகளில் கையெழுத்துப் போடும்பொழுது எல்லாம், உதாரணமாக 7-2-98 என்று போடுவதில்லை. 7-2-1998 என்றுதான் போடுவேன். என்னிடம் செகரட்டரி எல்லாம்கூட கேட்டார்கள். “எல்லா மினிஸ்டர்களும் '98' என்றுதான் போடுகிறார்கள், ஏன் நீங்கள் மாத்திரம் '1998' என்று போடுகிறீர்கள் என்று கேட்டார்கள்”. எல்லா மினிஸ்டர்களும் இந்த வருடம் '98' என்று போடுவார்கள். அடுத்த வருடம் '99' என்று போடுவார்கள். அதற்கு அடுத்த வருடம், இரண்டு இலக்கம் என்ன போடுவார்கள் என்று கேட்டேன். 2000 என்று வரும்போது, இரண்டு சைபர்கள்தான் போடவேண்டும். (சிரிப்பு) அதனால்தான் இப்போதே நான் பழகிக்கொள்கிறேன். இரண்டாயிரத்திற்குத் தயாராகி, இப்போதே 1998' என்று போடுகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி). இது Software-ன் தத்துவம். 30 வருடங்களாக கணினி மொழியிலே இடச்சிக்கனத்தைக் கருதி எல்லோருமே இந்த இரண்டு இலக்கங்கள், இரண்டு சைபர்களைப் போடுவதா அல்லது போடாமல் விட்டு விடுவதா, '98', '68', '78' என்று போடுவதா இதன் விளைவு என்னவாகும் என்றால் 2000-ஆவது ஆண்டு வரும் காலத்தில் கணினி துறையில் '00' என்ற எண்கள் மாத்திரம் வரும்பொழுது அனைத்து கணினிகளைச் சார்ந்து நடக்கும் அத்தனை நடவடிக்கைகளும் திடீரென்ற நின்றுபோக நேரிடும். விமானம் போய்க் கொண்டிருக்கிறது என்றால் அப்படி நடக்கப் விமானம் போவதில்லை; உதாரணத்திற்காகச் சொல்கிறேன் போய் கொண்டிருக்கிறது என்றால் அந்த இரண்டு '00' மாத்திரம் வைத்திருந்தால், விமானம் போய்க்கொண்டிருக்கும்பொழுது, 2000 ஆவது வருடத்தில், இந்தக் கணக்கு தவறிவிட்டால், 4 இலக்கத்தில் இல்லாமல் இரண்டு இலக்கத்தில் இருந்தால், விமானம் நடுவழியில் வானத்தில் நின்றுவிடும். நின்றால் என்ன ஆகும் என்று உங்களுக்குத் தெரியும். அப்படிப்பட்ட ஆபத்து இந்த கணினி யுகத்தில் ஏற்படக்கூடும். இதன் விளைவாக மிகவும் முன்னேற்றமடைந்துள்ள மேலை நாடுகளில்கூட வாழ்க்கை ஸ்தம்பித்துப் போகும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

-

4

இதைச் சரிசெய்யும் பணி நம் நாட்டில் உள்ள மென்பொருள் நிறுவனங்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்பை