உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

25

மாவட்டத்திற்கு அந்தந்தப்பகுதிகளுக்கு இன்னின்ன தொழிற்சாலைகள் வேண்டும் என்று எதிர் கட்சியைச் சேர்ந்த அங்கத்தினர்களும், ஆளும் கட்சியைச் சேர்ந்த அங்கத்தினர்களும் உங்களைப் பார்த்து தைரியமாகக் கேட்கிறபோது, அந்த தைரியத்தை பெற்று, டில்லி சென்று, தெளிவாக, தைரியமாக வாதாடி, தமிழகம் வாழ்வதற்கு, தமிழகத்தில் தொழில்கள் சிறப்பதற்கு, தொழில்கள் மூலம் தமிழகம் வளம் பெறுவதற்கு. தமிழக மக்களுடைய வாழ்க்கை நலம் பெறுவதற்கு உறுதுணையாக இந்த அமைச்சரவை போராட வேண்டுமென்று கேட்டுக்கொண்டு என்னுடைய உரையை முடிக்கின்றேன்.