உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

தொழில்துறை பற்றி

அந்த 4 ஆம் தேதி அன்று உலகப்புகழ் பெற்ற 28 நிறுவனங்கள் அங்கே தங்கள் மென்பொருள் தயாரிப்பைத் தொடங்கிட இருக்கின்றன. அந்தத் திட்டத்தை இங்கே அறிவிக்க விரும்புகிறேன்.

டிட்கோவும், டாக்டர் ஏ.வி.கே. ரெட்டி என்னும் அமெரிக்க வாழ் இந்தியரும் இணைந்து திருப்பெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் 27 கோடி ரூபாய் செலவில் Condoms உற்பத்தி செய்யும் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட Technical Products தொழிற்சாலை ஜூலைத் திங்களில் தொடங்கப் படவுள்ளது.

கும்மிடிப்பூண்டியில் 19.90 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது, ஏற்றுமதித் தொழில் மேம்பாட்டுப் பூங்கா- Export Promotion Industrial Park - இந்தப் பூங்கா அமைப்பதில் மத்திய அரசின் வர்த்தக அமைச்சகமும் பங்கெடுத்துள்ளது. ஜூலைத் திங்களில் தொடங்கப்படவுள்ள தொழிற்சாலைகளில் இதுவும் ஒன்றாகும்.

திருப்பெரும்புதூரில் 500 ஏக்கர் பரப்பளவில் 202 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள சிப்காட் தொழில் பூங்காவும் ஜூலைத் திங்களில் தொடங்கப்படவுள்ளது

=

தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு மைய சக்தியாக விளங்கும் நாங்குநேரி உயர் தொழில் நுட்பப் பூங்கா மொத்தம் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. டிட்கோவும், இரண்டு அமெரிக்க நிறுவனங்களும் இணைந்து இந்தப் பூங்காவை உருவாக்கி வருகின்றன. இந்த உயர் தொழில் நுட்பப் பூங்கா, மத்திய அரசின் சமீபத்திய ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கையின் சிறப்புப் பொருளாதாரப் பகுதியாக - Special Economic Zone அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி நம்முடைய மாண்புமிகு உறுப்பினர்கள் சிலபேர் இங்கே சொன்னார்கள். இப்படிப்பட்ட பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் ஆரம்பித்து என்ன பயன் என்று சொன்னார்கள். நம்முடைய மோகன் கந்தசாமி அவர்கள் பேசும்போது கூட "பெரிய தொழில்களை ஆரம்பிக்கிறீர்கள். சிறிய தொழில்கள் எல்லாம் என்ன ஆயிற்று” என்று கேட்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், இன்று நாம் விவாதித்துக்