கலைஞரின் சட்டமன்ற உரைகள்
291
கொண்டிருக்கிற மானியமே, பெரும் தொழில்கள் பற்றிய மானியம் தான். இதிலே “சிறு தொழில்கள் என்ன ஆயிற்று” என்று அவர்கள் கேட்டார்கள். சிறுதொழில்களைப் பற்றியும் இந்த அரசு கவலைப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. "சில தொழில்கள் செத்து விட்டனவே, மூடப்பட்டுவிட்டனவே” நம்முடைய சுப்பராயன் அவருக்கே உரிய அந்த நவீன பாஷையில் அல்லது கரடு முரடான பாஷையில் "பிறப்பைச் சொல்லுகிறீர்கள், இறப்பைச் சொல்லவில்லையே” என்று சொன்னார்கள். என்ன செய்வது? ஒரு வீடு என்று இருந்தால், அங்கே இறந்தவர்களும் இருப்பார்கள், பிறப்பவர்களும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள், அது சகஜம், இயற்கை. இரண்டு கிழங்கட்டை இருந்தால் செத்துப் போய்விடும் அதுமாதிரி நலிந்த தொழில்கள் இருந்தால் அவை செத்துப்போய் விடும். புதுத் தொழில்கள் வந்தால் அதைப் பாராட்டி கண்ணே, மணியே என்று கொஞ்ச வேண்டும். அப்படிக் கொஞ்ச வேண்டு மென்றுதான் நான் சுப்பராயனைக் கேட்டுக்கொள்கிறேன். அவர் நாங்குநேரியைப் பற்றிச் சொன்னார். அங்கே சுமார் 9,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 55,000 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கும். வெளிநாட்டு முதலீடு சுமார் 8,000 கோடி நாங்குநேரிக்கு வரும். இங்கே நிறுவப்படும் தொழில் நிறுவனங்கள் மூலம் நம் நாட்டிலே உள்ள மற்ற நிறுவனங்களும் ஒப்பந்த அடிப்படையில் பணி எடுத்துச் செய்யலாம். தொழில் நுட்பம் உயரும். தூத்துக்குடி துறைமுக உபயோகம் அதிகரிப்பதால் அதன் விரிவாக்கம் நடைபெற வழிவகுக்கும். அயல்நாட்டு முதலீடுகளை மிகவும் பெருக்குகின்ற நடைமுறை இடையூறுகள் இந்தத் திட்டத்தில் அறவே களையப்படும். இந்த Special Economic Zone-ல் அந்த நிலைமை எல்லாம் அறவே களையப்படும் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கின்றேன். ஜூலைத் திங்களில் ஆரம்பித்து வைக்கப்படவிருக்கிறது இந்த நாங்குநேரி பூங்கா.
மகளிர்கான உயிரியல் தொழில் நுட்பப் பூங்கா 6.70 கோடி ரூபாய் முதலீட்டில் கேளம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 1000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய பூங்கா வரும் ஆகஸ்ட் மாதத்திலே தொடங்கப்படும்
Tanflora Infrastructure Park; 24.85 கோடி ரூபாய் முதலீட்டில் மலரைப் பதப்படுத்தும் தொழில் பூங்கா ஒன்று