304
தொழில்துறை பற்றி
ஆவார்கள். அவர்கள் பேசும்போது கேட்டார்கள்; Centre for Moni- toring Indian Economy (CMIE), பிப்ரவரி 2006ஆம் ஆண்டு தந்துள்ள விவரப்படி, Investment in Manufacturing Sector என்ற விவரப்படி, அவர்கள் ஒரு பிரச்சினையை எழுப்பினார்கள். உற்பத்தித் துறையிலே, அம்மையார் ஜெயலலிதா அவர்களுடைய ஆட்சிதான் முதலிடத்தில் இருந்ததாகச் சொன்னார்கள். என்னுடைய கையிலே இருப்பவை C.M.I.E. வெளியிட்ட புத்தகங்கள். இரண்டு புத்தகங்கள் வைத்திருக்கின்றேன். அந்தப் புத்தகத்திலே உள்ள ஆதாரங்களை, புள்ளிவிவரங்களை வைத்துத்தான் நான் இந்தக் கருத்தை எடுத்துக்கூறக் கடமைப் பட்டிருக்கின்றேன்.
நான் முதலிலே சொன்னதுமாத்தி Centre for Monitoring Indian Economy (CMIE), பிப்ரவரி 2006-ல் தந்துள்ள விவரப்படி, கடந்த ஆண்டு; ஒரிசாவில் 1,76,770 கோடி ரூபாய் உற்பத்தித் துறையில் முதலீடு, ஜார்கண்ட் 1,70,460 கோடி ரூபாய், குஜராத் 96,162 கோடி ரூபாய், கர்நாடகா 55,485 கோடி ரூபாய், ஆந்திரா 55,359 கோடி ரூபாய், தமிழ்நாடு 54,488 கோடி ரூபாய். வரிசைப்படி ஆறாவது இடத்திலே அம்மையார் அவர்கள் ஆண்ட மாநிலம், தமிழகம் அமைந்திருக்கிறது இந்த விவரப்படி. ஆனால் இங்கே முதலிடம் பெற்றிருந்ததாக நண்பர்கள் வாதிட்டிருக்கின்றார்கள்.
இன்னொரு ஆதாரத்தையும் சொல்கிறேன். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே என்ன நிலை என்றால், 2001 என்று எடுத்துக்கொள்ள வேண்டும். 2001ஆம் ஆண்டு முடிவில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அன்றைய நிலையில், தற்காலிகமாக முடிந்த அந்தக் காலகட்டத்தில், ஒரிசாவிலே 23,366 கோடி ரூபாய், ஜார்கண்ட் வெறும் 731 கோடி ரூபாய், குஜராத் 36,058 கோடி ரூபாய், கர்நாடகா 27,345 கோடி ரூபாய், ஆந்திரா 34,928 கோடி ரூபாய், மராட்டியம் 26,218 கோடி ரூபாய், தமிழ்நாடுதான் 36,778 கோடி ரூபாய். (மேசையைத் தட்டும் ஒலி). ஆக, அன்றைய நிலையில், இதில், தமிழ்நாடுதான் முதல் இடத்திலே இருந்தது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். நான் இந்தப் 'போட்டாபோட்டி', 'காட்டாங்குஸ்தி'-யில் என்னைச் சிக்க வைத்துக்கொள்ள விரும்பவில்லை. இன்று நாம் எல்லோரும் அமர்ந்து, இந்த மாமன்றத்தில், தமிழ்நாட்டினுடைய மொத்த