306
தொழில்துறை பற்றி
இதை நான் விளக்கமாகத் தருகிறேன். ஏதோ அவருக்குப் பதிலுக்குப் பதில் சொல்வதாக அவரும் கருதிக்கொள்ளக்கூடாது; விளக்கம்தான்.
தமிழ்நாடு, உற்பத்தித் துறை முதலீட்டில் கடந்த ஆட்சியில், முதல் மாநிலமாகத் திகழ்ந்தது என்ற வாதமும் அடிபட்டுப் போகின்ற புள்ளிவிவரங்களை எடுத்து வைத்திருக்கின்றேன். Annual Survey of Industries, 2003-2004-ன்படி வெளிவந்துள்ள விவரப்படி, மராட்டியத்தில் Fixed Capital 83,472 கோடி ரூபாய், குஜராத்தில் 85,788 கோடி ரூபாய், தமிழ்நாடு 46,430 கோடி ரூபாய், 2004 விவரப்படி, Invested Capital மராட்டியத்தில் 1,24,019 கோடி ரூபாய், குஜராத்தில் 1,15,027 கோடி ரூபாய், தமிழ்நாடு 68,330 கோடி ரூபாய். எனவே, எப்படித் தமிழ்நாடு இவற்றில் எல்லாம் முதல் நிலையிலே இருக்கமுடியும் என்ற கேள்விக்கு நாமே பதிலைத்
தேடிக்கொள்ளவேண்டும்
இன்னொன்றும் கேட்டார்கள்; எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டத்திற்கு 900 கோடி ரூபாய் என்றும், கிருஷ்ணகிரி மாவட்டச் சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் என்றும், நாங்குநேரி உயர் தொழில் நுட்பப் பூங்கா திட்டத்திற்கு 640 கோடி ரூபாய் என்றும் செலவாகும் எனக் குறிப்பிட்டுவிட்டு, அதற்கான 2040 கோடி ரூபாயை, நிதியை, நிதிநிலை அறிக்கையிலே ஒதுக்கீடு செய்யவில்லையே, ஏன் என்று கேட்டார்கள். எடுத்த எடுப்பிலே, மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது சரியான கேள்வி என்றுதான் தோன்றும். ஆனால், அது சரியான கேள்வி என்று அதை மறுத்து, நான் பதில் சொல்ல விரும்பவில்லை; விளக்கம் அளிக்க விரும்புகின்றேன்.
இவற்றிற்கெல்லாம் தேவைப்படும் நிதி, பங்கு முதலீடுகள், Share Capital மூலமாகவும், கடனாகப் பெறுவதன் மூலமாகவும் திரட்டப்படும். பங்கு முதலீடுகள் மூலமாக ஏற்படும் ஈவுத் தொகை, Equity, சிறிய பகுதியேயாகும். இதனை, இந்தத் திட்டங்களை நிறைவேற்ற, TIDCO நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். தேவைப்படும் நிதியின் பெரும் பகுதி, வங்கிகளிடமிருந்தும், நிதி நிறுவனங்களிட மிருந்தும் கடனாகப் பெறப்படும். பொதுவாக, இதுபோன்ற திட்டங்களுக்கெல்லாம், இந்த முறையில்தான் நிதிக்கான