உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

307

ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதை, அமைச்சராகப் பணியாற்றி யிருந்த நம்முடைய திரு. டி. ஜெயக்குமார் அவர்கள், நன்றாகவே அறிவார்கள் என்று கருதுகிறேன். இது எல்லா ஆட்சிக் காலங்களிலும் பின்பற்றப்பட்டுவரும் வழிமுறையேயாகும்.

இங்கே, நம்முடைய காங்கிரஸ் கட்சியினுடைய சட்டமன்றக் கட்சித் தலைவர், திரு. டி. சுதர்சனம் அவர்கள் ஒரு பிரச்சினையை எழுப்பினார்கள். கடந்த ஆட்சியில், Aswanth Sugars என்ற நிறுவனம் என்பதன் பேரில் (குறுக்கீடு) - Aswanth Sugars- தானே?- பேரில் நடைபெற்ற விதிமீறல்கள், முறைகேடுகள் தொடர்பாக, அந்த நிறுவனத்தின் பின்னணியிலே இருப்பவர்கள் யார், யார்; என்ன நடவடிக்கை என்றெல்லாம் கேட்டார்கள். அதைப்பற்றி யெல்லாம் நான் அவர்களுக்குச் சொல்லுகின்றேன். ஏனென்றால், அவருக்கு ஏதேனும் உறுதியளிக்க வேண்டும்; நேற்றைக்கே கோபம் வந்து விட்டது அல்லவா? (சிரிப்பு). ஆகவே, இதற்கும் உறுதியளிக்க வேண்டும். உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு, ஒளிந்திருக்கும் உண்மைகளை வெளிச்சத்திற்கு நிச்சயமாகக் கொண்டு வருவோம் என்பதை மாத்திரம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. டி. சுதர்சனம் அவர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

இங்கே, தொழில் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை, இந்த இரண்டு தலைப்புகளிலும், மொத்தம் 285 வெட்டுத் தீர்மானங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. நானும் 1957ஆம் ஆண்டிலேயிருந்து இந்த அவையிலே இருந்திருக்கிறேன். பேரசிரியரும், 1957-லே என்னோடு இருந்தார். பிறகு Parliament-க்குச் சென்றுவிட்டு இங்கே வந்தார். தொடர்ச்சியாக 1957ஆம் ஆண்டிலேயிருந்து, இதுவரையில் இருந்திருக்கிறேன். இவ்வளவு வெட்டுத் தீர்மானங்களை நான் பார்த்ததேயில்லை. அவர்கள்கூட சொன்னார்கள்; ஒவ்வொரு நாளும், இங்கே மானியங்களைத் தொடங்குவதற்கு முன்பு, நம்முடைய சபாநாயகர் அவர்கள், பள்ளிக்கூடத்திலே attendance எடுப்பதுபோல, ஒவ்வொருவருடைய பெயரைக் கூப்பிடுவதும், அவர்களும் 'உள்ளேன் ஐயா' என்று கூறுகின்றவிதத்தைப்போல, (சிரிப்பு) அவர்கள் பெயர் சொல்வதும் - ஆக, 285 வெட்டுத் தீர்மானங்கள்;