48
தொழில்துறை பற்றி
போயிருக்கிறார்கள். அதைத்தான் சென்ற ஆண்டும் சொன்னோம்; அதைத்தான் இந்த ஆண்டும் சொல்கிறோம். நான் இன்னொன்றைக் கூடச் சொல்வேன. அதே அசோக் லேலண்ட் நிறுவனம், கூட்டுத் துறையிலே, வார்ப்படங்கள் தயாரிக்கிற இன்னொரு. .
திரு. துரைமுருகன்: சென்ற ஆண்டு முதலமைச்சர் பதில் அளிக்கும்போது, அந்தச் சலுகை கொடுக்கமாட்டேன் என்று சொன்னதால்தான் அவர்கள் வேறு மாநிலத்திற்குப் போனார்கள் என்று சொன்னார்களே, இப்பொழுது அமைச்சர் சொல்வது அதற்கு முரணாக இருக்கிறதே. . .
மாண்புமிகு பேரவைத் தலைவர் : முதலமைச்சரே சொல்லியாயிற்று என்றுதானே மாண்புமிகு உறுப்பினர் துரைமுருகன் சொல்கிறார், அதற்குப் பிறகு திருப்பி, திருப்பி ஏன் எழுந்து கேட்கவேண்டும். அடுத்ததற்கு போகலாம்.
மாண்புமிகு திரு. எஸ். திருநாவுக்கரசு : பேரவைத் தலைவர் அவர்களே, என்னை மன்னிக்க வேண்டும். அடுத்ததற்கு போவதற்கு முன்னாலே, அதனுடைய தொடர்பாக, அதே நேரத்திலே இறுதியாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அப்படி அவர்கள் கோபம் கொண்டு இங்கிருந்து போயிருந்தால், நம்முடைய புதுக்கோட்டையிலே, டிட்கோ நிறுவனத்தோடு சேர்ந்து, ஜாய்ன்ட் செக்டாரிலே வார்ப்படங்கள் தயாரிக்கிற இன்னொரு தொழிற்சாலையிலே. .
கலைஞர் மு. கருணாநிதி : மன்னித்துக் கொள்ள வேண்டுகிறேன், அடிக்கடி குறுக்கிடுவதற்காக. அவர்கள் கோபம் கொண்டு போனார்கள் என்ற யாரும் சொல்லவில்லை. எந்த ஒரு தொழில் அதிபரும் ஏதோ ஒரு முயற்சியில் ஈடுபட்டு, அதற்காக, அந்த நாட்டின் மீதே கோபித்துக் கொண்டு, அல்லது அந்த மாநிலத்தின் மீதே கோபித்துக் கொண்டு, அங்கே இருக்கிற தொழில்களையெல்லாம் துடைத்து எடுத்துக் கொண்டு போய்விட மாட்டார்கள். வேறு தொழில்களிலே அவர்கள் தொடர்பு கொள்வார்கள். ஆனால் ஒரு பெரிய தொழிற்சாலை, ஒரு எக்ஸ்டென்ஷன், இங்கே ஏற்பட்டு, பல்லாயிரக்கணக்கானவர் களுக்கு வேலை கிடைக்கக்கூடிய ஒரு வாய்ப்பை நாம் இழந்து விட்டோம். அதற்கு அவர்கள் கேட்ட சலுகையை இந்த அரசு