உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

49

தரவில்லை என்பதுதான் காரணம். அதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு.

மாண்புமிகு திரு. எஸ். திருநாவுக்கரசு : அந்தக் குற்றச்சாட்டுக்குத்தான் ஆதாரம் இல்லை. அடிப்படை இல்லை யென்று சென்ற ஆண்டும் மறுத்தோம், இந்த ஆண்டும் மறுக்கிறோம். அப்படி அவர்கள் வேறு மாநிலத்திலே இன்சென்டிவ்ஸ் அதிகம் கிடைக்கிறது என்ற காரணத்தாலே வேறு மாநிலத்திற்கு அவர்கள் போவது உண்மையாக இருக்குமானால், டிட்கோ நிறுவனத்தோடு கூட்டுத் துறையிலே இருக்கிற அந்த நிறுவனத்தையும் வேறு மாநிலத்திலேயிருக்கிற அந்த அரசோடு தொடர்புகொண்டு, அந்த மாநிலத்திலே கொடுக்கிற அதிகமான இன்சென்டிவ்ஸ் பெற்றுக்கொண்டு அங்கே துவங்கலாம். ஆனால் இங்கேயே துவங்குகிறார்கள் என்பதிலிருந்து இந்த அரசு கொடுக்கிற அந்த இன்சென்டிவ்ஸ் பொறுத்தவரை அதிலே, அவர்களுக்குக் கருத்து வேறுபாடில்லை. ஆனால், சேசிஸ் பொறுத்தவரையிலும் அவர்களுடைய விரிவாக்கத்தை, வேறு பகுதியில் வைத்தார்களே அதற்குக் காரணம், நான் சொன்னது திருப்பித் திருப்பிச் சொல்வது, நான் சொல்வது அல்ல, அந்த நிறுவனத்தினுடைய இயக்குநர், எம்.டி.யே சொன்னது, அதன் தலைவரே சொன்னது, பொருளாதார ரீதியாக, வியாபார ரீதியாக, வட மாநிலத்தை, வேறுமாநிலத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதுதான்

அதைப் போல் மத்திய அரசு ரூ. 400 கோடி அளவிலே ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு தரக்கூடிய அந்த ரெயில் பெட்டித் தொழிற்சாலையைத் தமிழகத்திற்கு, எடுத்துக் கொள்ளுங்கள், எடுத்துக்கொள்ளுங்கள், என்று தந்து கொண்டிருந்தார்கள். நீங்கள் வேண்டாம், வேண்டாம் என்று சொன்னீர்கள், அவர்கள் திருப்பி திருப்பதிக்குப் போய் விட்டார்கள் என்று இதே குற்றச்சாட்டைச் சென்ற ஆண்டும் சொன்னார்கள்; ஆனால் கலைஞர் அவர்கள் கொஞ்சம் மெருகோடு இந்த ஆண்டும் அதையே சொன்னார்கள். நான் திருப்பியும் அதற்குச் சென்ற ஆண்டு சொன்ன பதிலைத்தான் இந்த ஆண்டும் சொல்கிறேன். இடம் கேட்கிறார்கள். மத்திய அரசு தொழில் துவங்க வேண்டுமென்றால்; இந்தத் தொழிற்சாலை வருகிறது, அதற்கு இத்தனை ஏக்கர் இடம் வேண்டுமென்று

3 - க.ச.உ. (தொ.து.)