64
தொழில்துறை பற்றி
விஷயம். இருந்தாலும் எதுவுமே நடைபெறாமல் இருந்து விட வில்லை. நடைபெற்றவைகளிலே சில குறைபாடுகள் இருந்திருக் கலாம்; சில தயக்கங்கள், தாமதங்கள் இருந்திருக்கலாம். எனவே, எதுவுமே நடைபெறவில்லை இருபதாண்டுக் காலத்தில், திராவிடக் கட்சிகளினுடைய ஆட்சிகளில் என்பது ஒரு தவறான குற்றச்சாட்டு என்பதை நான் எடுத்துக்காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
―
இதே மாமன்றத்திலேதான் 1957-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய குழுத் தலைவராக எதிர்க்கட்சித் தலைவராகக் கூட அல்ல, எதிர்க்கட்சித் தலைவர் அப்பொழுது வி. கே. இராமசாமி முதலியார் முன்னேற்றக் கழகத்தினுடைய குழுத் தலைவராக இருந்தபொழுது அன்றைக்கிருந்த முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரைப் பார்த்து சொன்னார்கள். நாங்கள், தமிழகம் புறக் கணிக்கப்படுகிறது; தென்னகம் புறக்கணிக்கப்படுகிறது என்று முழங்குகிற முழக்கத்தை நீங்கள் சாதகமாக எடுத்துக் கொண்டு, எங்களைக் காட்டியாவது, தமிழகத்தினுடைய தேவைகளைப் பெறுங்கள் என்று அன்றைக்கு அண்ணா அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு பதினெட்டு ஆண்டுக் காலம் 49-இலே தொடங்கி, பதினெட்டு ஆண்டுக் காலம் எதிர்க்கட்சியாக இருந்த அந்தக் காலக் கட்டத்திலேயெல்லாம் தமிழகத்திற்குத் தொழில் வளம் தேவை; வட மாநிலங்களிலே தொழில் வளம் பெருகுகிறது; இங்கே தொழில் வளம் இல்லை என்பதை எடுத்துக்காட்ட எத்தனையோ சான்றுகளை மேடைகளில், ஏடுகளில், கருத்தரங்குகளில் எடுத்துச் சொன்ன வரலாறு மறந்துவிடக் கூடிய ஒன்று அல்ல.
அன்றைக்கு நெய்வேலி நிலக்கரி என்றும், காவிரி வட்ட எண்ணெய் என்றும், சேது சமுத்திரத் திட்டம் என்றும், சேலம் இரும்பு என்றும் திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா அவர்களுடைய தலைமையிலே குரலெழுப்பியபோது அந்தக் குரல் கேலிக்குரியதாக ஆக்கப்பட்டதும் உண்டு. தட்டினால் தங்கம் என்கிறார்கள், தோண்டினால் இரும்பு என்கிறார்கள் என்றெல்லாம் கேலி பேசப்பட்டதுண்டு.