உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

65

ஆனால், அன்றைக்கு அண்ணா தலைமையிலே, திராவிட முன்னேற்றக் கழகம் சொன்ன அந்தக் கருத்துக்கள், நெய்வேலியிலே நிலக்கரி இரண்டாவது சுரங்கம் அமைகிற அளவிற்கு ஆகியிருக்கிறது என்பதையும், காவிரி வட்டத்திலே எண்ணையாவது, இவர்களுக்கெல்லாம் ஏதோ கோளாறு என்று கேலி பேசப்பட்ட காலம் மாறி இன்றைக்கும் காவிரி வட்டத்தி லிருந்து எண்ணெய் பெருக்கெடுத்து, அதனை எடுக்கின்ற சூழ்நிலை உருவாகியிருப்பதையும் காணும்பொழுது, தமிழகத் தினுடைய தொழில் வளர்ச்சிக்காகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆளுங்கட்சியாக வருவதற்கு முன்பிருந்தே குரல் கொடுத்த ஒரு இயக்கம், அந்தக் குரலை மதித்துத்தான் தீர வேண்டும் என்ற அளவிற்கு அன்றைக்கு டெல்லி அரசு தமிழகத்திற்குத் தொழில்களைத் தர முன்வந்த அந்தக் கால கட்டத்தை யாரும் மறந்து விட இயலாது.

இங்கே நம்முடைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னுடைய நண்பர் வரதராசன் அவர்கள் பேசிய பொழுது சொன்னார்கள். மத்திய அரசினுடைய முதலீடுகள் இந்த மாநிலத்தைப் பொறுத்தவரையில் மிகக் குறைவாக இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி, வேதனையையும் தெரிவித்து, தன்னுடைய கண்டனத்தையும் இங்கே எடுத்துக் காட்டினார்கள்.

கஎ

நான் ஒரு புள்ளி விவரத்தைச் சொன்னால் வியப்பாகவும் இருக்கும்; வேதனையாகவும் இருக்கும்.

1969-70ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலத்தில் மத்திய அரசினுடைய தொழில் முதலீடு மாத்திரம் - நான் மாநில அரசினுடைய தொழில் முதலீட்டையெல்லாம் சொல்லவில்லை. 69-70ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்திலே மத்திய அரசினுடைய தொழிலுக்கான முதலீடு 98 கோடி ரூபாய், 86-87-இல் 6,761 கோடி ரூபாய். 69 மடங்கு அதிகம். மராட்டியத்தில் 69-70ஆம் ஆண்டு மத்திய அரசினுடைய முதலீடு 120 கோடி ரூபாய். 1986-87-ல் 10,905 கோடி ரூபாய். அதாவது 91 மடங்கு அதிகம். குஜராத் மாநிலத்தில் 1969-70 ல் மத்திய அரசினுடைய முதலீடு 97 கோடி ரூபாய். 1986-86-ல் 3,179 கோடி ரூபாய். அதாவது 33 மடங்கு Сumш. அதிகம். பஞ்சாபில் 1969-70-ல் மத்திய அரசினுடைய முதலீடு 34 கோடி ரூபாய். 1986-87 -ல் 641 கோடி ரூபாய். 19 மடங்கு அதிகம்.