உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தொழில்துறை பற்றி

இராஜஸ்தானில் 1969-70-ல் 34 கோடி ரூபாய். 1986-87-ல் 780 கோடி ரூபாய். 23 மடங்கு அதிகம். உத்தரப் பிரதேசத்தில் 1969-70ல் 154 கோடி ரூபாய். 1986-87ல் உத்தரப் பிரதேசத்தில் 3,913 கோடி ரூபாய். அதாவது 25 மடங்கு அதிகம். தமிழ்நாட்டில் 1969-70ல் 311 கோடி ரூபாய் மத்திய அரசு முதலீடு. 1986-87-ல் 3,018 கோடி ரூபாய். சுமார் 10 மடங்குதான் அதிகம். ஆந்திராவில் 69 மடங்கு அதிகம். மகாராஷ்டிராவில் 91 மடங்கு அதிகம். குஜராத்தில் 33 மடங்கு அதிகம். பஞ்சாபில் 19 மடங்கு அதிகம். இராஜஸ்தானில் 23 மடங்கு அதிகம். உத்தரப் பிரதேசத்தில் 25 மடங்கு அதிகம். தமிழ் நாட்டில் மாத்திரம் 10 மடங்குதான் அதிகமாகி இருக்கிறது, 1969-லிருந்து 1987 வரையில். எனவே, இங்கே எடுத்துச் சொல்லப் பட்ட வாதங்கள் மத்திய அரசினுடைய முதலீடு நம்முடைய மாநிலத்தில் மிகக் குறைவாகத்தான் ஆண்டுதோறும் செய்யப் பட்டிருக்கிறது என்ற உண்மைக்கு மேலும் வலுவூட்டுகின்றன என்ற வகையில்தான் இந்தப் புள்ளி விவரங்கள் அமைந் திருக்கின்றன. மாநில அரசைப் பொறுத்தவரையில் தொழில் வளர்ச்சியைப் பற்றிக்குறிப்பிட வேண்டுமென்றால், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் சேலம் உருக்குத் தொழிற் சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, அதனுடைய பணிகள் தொடங்கப்பட்டன. எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. அன்றைக்கு ஏடுகள் படித்த யாரும் மறந்திருக்கவும் இயலாது. முதலமைச்சராக நான் அறிஞர் அண்ணா அவர்களுக்குப் பிறகு பொறுப்பேற்றவுடன் டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுவினுடைய கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நேரத்தில் சேலம் திட்டத்தை வலியுறுத்திப் பேசியும் கூட நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் அது அன்றைக்கு இடம் பெறாத காரணத்தால் அன்றைக்குத் தமிழ் நாட்டு மக்கள் அத்தனை பேர்களுடைய சார்பாகவும், இந்த நான்காவது திட்டத்தின் வரைவை நான் புறக்கணிக்கிறேன் என்று எடுத்துச் சொன்னேன். இவ்வளவு வேகமாகக் கருத்தைச் சொல்லி விட்டீர்களே என்று அன்றைக்கு மத்தியிலே அமைச்சராக இருந்த திரு. சி. எஸ். அவர்கள் கூட என்னிடத்தில் வருத்தப் பட்டுக்கொண்டார். ஆனால் அப்படி நான் பேசிய அடுத்த வாரமே அன்னை இந்திரா காந்தி அவர்கள் சேலம் இரும்பாலைத் திட்டத்திற்கான அறிவிப்பைச் செய்து, என்னை டெல்லிக்கு உடனடியாக வரச்செய்து, அந்த அறிவிப்பை என்னுடைய கரங்களில்