74
தொழில்துறை பற்றி
குறைந்த சாம்பல் வண்ணப் பாறை கன மீட்டர் 475 டாலர். நமது டாமின், தரம் உயர்ந்த சாம்பல் வண்ணப் பாறையை ஒரு கன மீட்டர் 404லிருந்து 427 டாலர். 1987-88-ல் தனியார் ஏற்றுமதி செய்த தரம் குறைந்த சாம்பல் வண்ணப் பாறை ஒரு கன மீட்டர் 575 டாலர். நமது டாமின் நிறுவனம், தரம் மிக உயர்ந்த சாம்பல் வண்ணப் பாறையை ஒரு கன மீட்டருக்கு 512லிருந்து 538 டாலர். இது சாம்பல் வண்ணப் பாறை.
கருப்பு வண்ணப் பாறை விஷயத்தில் அதை விட அதிகத் தவறு. 1986-87ஆம் ஆண்டு குன்னங்கிராமம் இந்தக் குன்னங்கிராமம்தான் இந்தக் கற்பாறைகளுக்கு சிறந்த இடம் என்று புகழப்படுகிற இடம் - அந்த குன்னங்கிராமத்தில் டாமின், தனியார் இருசாராரும் கருப்புப் பாறைகளை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
அதில் டாமின் வெட்டிய பாறைகள் தனியார் அனுப்பிய பாறைகளை விட உயர்ந்த தரம் உள்ளவை. அந்தப் பாறை ஏற்றுமதியில் 1986-87ல் டாமின் நிறுவனம் பெற்ற சராசரி விலை ஒரு கன மீட்டருக்கு 714 டாலர். அதே ஆண்டு ஜெம் கிரானைட்ஸ் என்ற தனியார் ஒரு கனமீட்டருக்கு 1,500 டாலர் என்ற விலையிலே ஏற்றுமதி செய்திருக்கிறார். 2 மடங்கு அதிகமாக. நாம் ஏற்றுமதி செய்தது கன மீட்டருக்கு 714 டாலர். தனியார் நிறுவனம் ஒரு கன மீட்டருக்கு 1,500 டாலர் என்ற விலையிலே ஏற்றுமதி செய்தது. இதன் காரணமாக மாத்திரம் ஒரு சுரங்கத்திலே ஏற்பட்ட நஷ்டம் ஒரே ஆண்டில் 48 இலட்சம் ரூபாய். 1986ஆம் ஆண்டு திருவக் கரையிலே உள்ள ஒரு சுரங்கப்பாறையில் ஒரு கன மீட்டருக்கு 1,281 டாலர் கொடுக்க ஜப்பானிய நிறுவனமான ஓரியண்ட் சாங்கியோ என்ற நிறுவனம் முன் வந்தது. ஆனால் நம்முடைய டாமின் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. அதற்கு மாறாக மிட்சுபிஷி கார்ப்பரேஷனுக்கு ஒரு கன மீட்டருக்கு 550 டாலர் வீதம் 1982 ஆம் ஆண்டு கொடுத்த அதே விலைக்கே ஏற்றுமதி செய்தது. இன்னொருவன் 1,281 டாலருக்குக் கேட்கிறான். அவனுக்குக் கொடுக்காமல் 1982 ஆம் ஆண்டு விலையை வைத்து 1986ஆம் ஆண்டில் 550 டாலருக்கு அந்த நிறுவனம் தருகிறது.