உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

கன

75

இதனால் ஒரு சுரங்கத்திலே மாத்திரம் ஏற்பட்ட இழப்பு ரூ. 41 இலட்சம். கவர்னருடைய ஆட்சியில் இதனுடைய பழைய மேனேஜிங் டைரக்டரை மாற்றிவிட்டு புதியதாக மேனேஜிங் டைரக்டர் நியமிக்கப்பட்டவுடன் - உங்களுக்குச் சொல்கிறேன்- 1988ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கருப்புப் பாறைக்கு ஒரு கன மீட்டருக்கு 714 டாலர் என்ற நிலை மாற்றப்பட்டு டிசம்பர் மாதம் 2,050 டாலராக உயர்த்தப்பட்டிருக்கிறது. டிசம்பர் மாதம் 2,050 டாலர் மீட்டருக்கு விற்கப்படுகின்ற அந்தக் அந்தக் கல் முதல் மாதம் - நவம்பர் மாதம் ஒரு கன மீட்டர் 714 டாலர் என்றுதான் விற்கப்படுகிறது. கவர்னர் ஆட்சியிலேகூட இந்த நடவடிக்கைகளை அவர் பொறுப்பு ஏற்று சில மாதங்களுக் கெல்லாம் தொடர்ந்து எடுத்திருப்பாரானால் இன்னும் அதிகத் தொகை அரசுக்குக் கிடைத்திருக்கக்கூடும். அவரும் நவம்பர் மாதத்திலேதான் - அந்த ஆட்சியிலே நடவடிக்கை எடுக்கப் பட்ட காரணத்தால் ஒரு மாதம்தான் தப்ப முடிந்தது என்பதையும் நான் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த முறைகேடு களால் டாமின் இதுவரை பயன்படுத்திய 2,500 ஏக்கரில் 10 கோடி ரூபாய் 1983ஆம் ஆண்டு முதல் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அது மாத்திரமல்ல, குளோபல் டெண்டர் உலகத்திலே பல பகுதிகளிலேயிருந்து கோரப்படுகின்ற டெண்டருக்குப் பெயர் குளோபல் டெண்டர். இதற்கு மாறாக முதலில் கொடுக்கப்பட்ட தனிப்பட்ட ஒருவருக்கேதான் அடுத்த ஆண்டு டெண்டர் கோரப்படாமலேயே தொடர்ந்து தனியாரை விடக் குறைந்த விலையிலே தரப்பட்டு வந்திருக்கிறது. இதை வைத்துக் கொண்டு பொதுத் துறையே மோசம் என்று யாரும் சொல்லிவிட முடியாது. நான் எந்த அமைச்சர்கள் மீதும் - அவரும் சொன்னார். அப்போது நான் இந்தத் துறைக்கு அமைச்சராக இல்லை என்று கூடச் சொன்னார் எனவே இந்தத் துறையை நிர்வகித்து வந்தவர்கள் அல்லது நிர்வகித்து வந்த அந்த எம்.டிக்கு மேலேயிருந்து அவரை ஊக்கப்படுத்தியவர்கள், இவர்கள் எல்லாம் எந்த முறையிலே எவ்வளவு பெரிய ஊழலை இந்தத் துறையில் நடத்தி இருக்கிறார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். ஆனால் இதை வைத்துக் கொண்டு பொதுத் துறையே

-