உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

தொழில்துறை பற்றி

உரை : 4 : 4

நாள் : 18.04.1990

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நேற்றும், இன்றும் தொழில் துறை மானியத்தின் மீது அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும், தலைவர்களும் தங்களுடைய கருத்துக்களைத் தொகுத்து வழங்கி, தமிழகத்திலே மேலும் தொழில் துறையை எப்படி எல்லாம் வளர்க்க வேண்டும் என்பதற்கான வழிமுறை களை இந்த அரசுக்குக் கூறியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக உரையாற்றத் தொடங்கிய சுப்பிரமணியன் அவர்களிலிருந்து, நம்முடைய காங்கிரஸ் கட்சியினுடைய துணைத் தலைவர் குமரி அனந்தன் அவர்கள் வரையில் பேசிய அனைவரும் தமிழகத்திலே தொழில் துறை வளர்ச்சிக்குப் பல ஆக்கப் பூர்வமான கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார்கள். நண்பர் உகம்சந்த் அவர்கள் மாத்திரம் எப்படியாவது ஒரு குறையை இந்த அரசின்மீது சொல்லவேண்டும் என்று சுற்றிசுற்றிப் பார்த்து, அந்த முயற்சியிலேயே கடைசி வரை நின்று தன்னுடைய உரையை அவர் நிறைவு செய்து இருக்கிறார். அவர் இந்த அரசைக் குறைகூற வேண்டும் எப்படியாவது என்பதற்காக எடுத்துக் கொண்ட முயற்சியை நான் தடுக்கவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை, மாறாக அதிலும் ஏதாவது இந்த அரசு தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டிய வழிமுறைகள் இருக்குமானால் அதனையும் நான் ஏற்றுக்கொண்டு அதன்படி தொழில் துறையை வளர்ப்பதற்கு இந்த அரசு பாடுபடும், பணியாற்றும் என்ற உறுதியினைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

இந்தத் தொழில் வளர்ச்சிக்கென ஒதுக்கப்பட்டுள்ள தொகை மிகக் குறைவாக இருக்கிறது என்று நேற்றையதினம்