பக்கம்:தொழில் வளம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உற்பத்தித்திறனும் வாழ்க்கைத் தரமும்

101



திட்டமும் நிதி நிலைகளும் பொருந்திய தனிநிலையான அமைப்புக்களாக இருந்தாலும், அவை NPC யுடன் இணைந்து, அவற்றின் திட்டங்களைத் தேசிய அமைப்புடன் சேர்ந்து செயற்படுத்தும் என எதிர்பார்க்கின்றனர்.

தொழில் துறைகளில் உற்பத்தித்திறன் உணர்வை இயக்குவதும், உற்பத்தித்திறன் பெருக்கத்திற்குக் கொண்டுசெல்லும். செய்முறைகளையும் தொழில் நுணுக்கங்களையும், இணைக்கத் தூண்டுவதும் NPCயின் திட்டத்தின் நோக்கங்களாகும். உற்பத்தித்திறன் முயற்சியினை நிறுவ மேலாட்சியினர் தொழிலாளர் முதலியோரிடையில் கூட்டுறவு உணர்வும் நம்பிக்கையும் கொண்ட - தகுந்த - சூழ்நிலையை ஏற்படுத்துவதும் அதன் நோக்கமாகும். அதே சமயத்தில் உற்பத்தித்திறன் உணர்வின் எழுச்சியால் தோன்றும் தேவைக்காக உற்பத்தித்திறன் வேலைகளுக்குரிய ஏற்பாட்டினைச் செய்யத் தூண்டுவதும் அதன் கருத்தாக விளங்குகிறது. பல்வேறு கருவிகளும் இடைச் சாதனங்களும் உற்பத்தித்திறன் பெருக்கத்திற்காகப் பயன்படும் வண்ணம் இயந்திரத்தொகுதி அளவில் உற்பத்தித்திறன் முயற்சியைக்கொண்டு செல்வதும் அத்திட்டத்தின் குறிக்கோளாகக் காணப்படுகிறது. அத்திட்டத்தின் முக்கிய விவரங்கள் விளக்கத்துடன் கீழே தரப்படுகின்றன.

தொழில் துறைகளில் உற்பத்தித்திறன் உணர்வை உண்டாக்க NPCன் செய்தி அறிவிப்புகளைப் பற்றிய ஒரு விரிவான திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. உற்பத்தித்திறன் பற்றிய ஒரு பத்திரிகையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/104&oldid=1382282" இலிருந்து மீள்விக்கப்பட்டது