பக்கம்:தொழில் வளம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

தொழில் வளம்



வெளியிடுவதும் அவைகளுள் ஒன்றாகும். அது; உற்பத்தித்திறன் முயற்சி, அத்திறனுக்குரிய பல் வேறு நிலைகளைப்பற்றிய கட்டுரைகள், உற்பத்தித் திறன் அளவைகள், உற்பத்தித்திறன் பயன்படுத்தும் வழி வகைகள், வெளிநாடுகளிலிருந்து கிடைக்கக் கூடிய பயனுள்ள செய்திகள் முதலியவைகளைப் பற்றிய மதிப்பீட்டைத் தொழில் துறைக்குப் பரப்பும். இத்திட்டம், உற்பத்தித்திறன் சம்பந்தமான தனிப்பட்ட பொருள்களைப்பற்றிய துண்டு வெளியீடுகளாக, சிறு நூல்களாக, வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும். NP Cன் பல்வோறு குழுக்கள், உற்பத்தித்திறன் குழுக்கள் என்பவற்றின் அறிக்கைகளை வெளியிடும். உற்பத்தித்திறன் பற்றிய அயல்நாட்டு இலக்கியங்களின் புதிய படிகளின் தழுவல்கள் முதலியவற்றையும் வெளியிடும். இவை கண்காட்சிகளை அமைத்தல், உற்பத்தித்திறன் பொருள்கள் பற்றிய திரைப்படங்களைத் தருவித்து வழங்க வழிசெய்தல், உற்பத்தித் திறன் உணர்வைப் பரப்பக் கண்டும் கேட்டும் அறிந்து. கொள்ளும் சாதனங்களைப் பயன்படுத்துதல் முதலியவற்றைச் செய்யும். சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் மாநாடுகள், வட்டமேசைகள் முதலியவற்றை நடத்தும். உற்பத்தித்திறன் பற்றிய ஒரு முழுமையான நூல் நிலையம் அமைக்க ஏற்பாடாகி, இருக்கிறது. அமெரிக்க சர்க்காரின் தொழில் நுணுக்கக் கூட்டுறவுத் துாதுக் குழுவினரிடமிருந்து கணக்கற்ற பல வெளியீடுகளைப் பெற்று, நூல் நிலையத்தின் உட்கரு ஏற்கனவே அமைக்கப்பெற்றுள்ளது.

எல்லா நிலைகளிலும் உளள மேலாட்சியினா், மேற் பார்வையாளர் என்போருக்கு, விரிந்த அடிப்படையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/105&oldid=1400118" இலிருந்து மீள்விக்கப்பட்டது