பக்கம்:தொழில் வளம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உற்பத்தி திறனும் வாழ்க்கை தரமும்

103



உற்பத்தித்திறன் சம்பந்தமான பல்வேறு பொருள்களில் பயிற்சி வசதிகளை அளிக்க வேண்டும் என்பது, குறிக்கோள். அந்தந்த நிலைகளில் உள்ள மேலட்சியினருக்கு ஏற்ப, தனித்தனிப் பொருள்களில் வெவ்வேறு பாட நேரங்களும் பாடத் திட்டங்களும் கொண்டபிரிவுகள் அமைக்கப்படும். இத் திட்டத்தை, உருவாக்க உற்பத்தித்திறனுடைய பல்வேறு நிலைகளுடன் தொடர்புள்ள உள்ளுர் உற்பத்தித்திறன் குழுக்கள், இயங்கும் நிலையங்கள், அமைப்புக்கள் என்பவை முடிந்த அளவிற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கம் காணப்படுகிறது. உற்பத்தித்திறன் பிரச்சனைகளைப் பற்றிய ஆராய்ச்சிக்குழுவின் அமைப்பதென்பதும், NP Cன் திட்டத்தில் மற்றாெரு பிரிவாக விளங்குகிறது. இந் நோக்கத்திற்காக உற்பத்தித் திறன் குழுக்களுக்குள் ஆராய்ச்சி அமைப்புகளை ஏற்படுத்தும் நோக்கம் இல்லை. மாறாக நடைபெறும் கல்வி நிலையங்கள், அமைப்புக்கள், பல்கலைக் கழககள் முதலியவற்றில் தனிப்பட்ட பிரச்சனைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளைத் தொடங்கும் பொறுப்பேற்கவும், தேவைப்பட்ட இடங்களில் அவற்றிற்கு வேண்டிய பொருளுதவிகளைச் செய்யவும். எண்ணங்கொண்டு விளங்குகிறது. மற்றும் தொழில் மையங்களிலும், பல்வேறுபட்ட தொழில் மையங்களுக்கு இடையிலும், தொழில் துறைகளுக்குள் இயந்திரத்தொகுதிகள் ஒன்றுக்கொன்று தமக்குள் சென்று, பார்வையிடும் முறையினை இந்தக் குழுக்கள் ஊக்கப்படுத்தி வளர்க்கும். இந்தச் சுற்றுப்பயணத் திட்டத்தில் உற்பத்தித்திறன் தொடர்பான பொருள்களைப் பற்றிய விவாதங்களும் கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறுகின்ற்ன. இதன் நோக்கம் விஞ்ஞான முறையில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/106&oldid=1400119" இலிருந்து மீள்விக்கப்பட்டது