பக்கம்:தொழில் வளம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

தொழில் வளம்



நடக்கும் மேலாட்சி, மனித உறவு, தொழிற் படிப்பு, எந்திரத்தொகுதியின் பரப்பு, பொருள்களைக் கையாளும் முறை முதலியவை போன்ற பொதுவான உற்பத்தித்திறன் கருத்துக்களில் தொழில் நுணுக்கப் பரிமாற்றத்தை வளர்ப்ப்தே. இது உறுதியாகிப் பரவினால் தொழில் துறையினர் அத்தகைய கருத்துக்களை பரிமாற்றம் செய்துகொள்வதில் பங்கேற்கவும், அவர்கள் வள்ர்க்கவும் தயங்கவும் மாட்டார்கள். ஒரே தொழில் துறைக்குள் மட்டும் இயந்திரத் தொகுதிகள் ஒன்றையொன்று பார்வையிடும் என்று யாரும் நினைப்பதில்லை. உண்மையில், வேறுபட்ட தொழில் மையங்களுக்கு இடையிலும் தனியார் துறையும் பொதுத் துறையும் சார்ந்த தொழில்களுக்கிடையிலும், இந்த முயற்சி உள்ளது.

உறபத்தித்திறன் சம்பந்தமான பல்வேறு பொருள்களில் ஓர் ஆண்டு பயிற்சிபெறும் பொருட்டு வெளிநாடுகளுக்குப் பயிற்சி பெறுவோரை அனுப்பவும் வழி அமைத்துள்ளனர். ஆரம்ப நிலையில், NPC பயிற்சி பெறுவோரைத் தயாரிக்கும். இந்த வகையில் ஆண்டுக்கு 50 பேருக்கு மேல் வெளிநாடு அனுப்பப்பட்டார்கள். அதே சமயம் நாட்டில் உள்ள கல்வி நிலையங்கள் அமைப்புக்களில் உதவத் தனித்திறனுயும் (Specialists) ஆலோசனையாளர்களையும் (Consultants) அயல் நாடுகளில் இருந்து வரவழைக்க NP C ஏற்பாடு செய்கிறது.

உற்பத்தித்திறன் முயற்சி கடைசியில் நாட்டின் எல்லாப்பொருளாதாரச் செயல்களையும் தன் வரம்பிற்குள் சேர்த்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/107&oldid=1400120" இலிருந்து மீள்விக்கப்பட்டது