பக்கம்:தொழில் வளம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உற்பத்தித்திறனும் வாழ்க்கைத்தரமும்

105


உற்பத்தித்திறன் பெருக்கத்திற்காக, உழவு, காட்டுத் துறை, வாணிபம் போன்ற பல்வேறு துறைகளில் அரசாங்கத்தைச் சார்ந்த செயல் நிலையங்களும் சாராத செயல் நிலையங்களும் முன்பே பல முறைகளை மேற் கொண்டுள்ளன. இம்முறைகளை ஒரு விரிவான உற்பத்தித்திறன் முயற்சியாக ஒருமைப்படுத்தும் தேவை ஏற்படும். என்றாலும், இப்போதைக்குத் தொழில் துறைகள் வரைமட்டும் NPC இயங்கும் வரையறையைக் கட்டுப்படுத்த எண்ணி உள்ளனர். இருந்த போதிலும் இப்பகுதியில் பொதுத் துறையிலும் தனியார் துறையிலும் உள்ள சிறிய தொழில்களையும், நடுத்தரமான தொழில்களையும் பெரிய அளவில் இம் முயற்சியில் சேர்த்துக்கொள்ளும்.

இதுவரை நாம் அறிந்தது நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டோர் இருக்கும் சூழ்நிலையில் அயல் நாட்டு அனுபவங்களை மேற்கண்ட குழுக்களின் மூலம் நம் நாட்டிற்குக் கொண்டுவர முயல்கிறார்கள் என்பதை அறிவிக்கிறது. இத்துறையில் தமிழ்நாடும் பெரும். அளவிற்குப் பங்குகொண்டுள்ளது. அதே சமயம் தமிழ்நாட்டுத் தொழிலதிபர்கள், வேலை தருவோர், தொழிலாளர்கள் மற்றும் உள்ள அலுவலர்கள் எல்லோரும் ஒருமனதாக உற்பத்தித்திறனுடைய நீண்டநாள் பலன்களைக்கருதி ஒத்துழைத்தால் அன்றித் தமிழ் நாட்டின் தொழில் வளம் மற்ற நாட்டவர் தம் தொழில் வளத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்பதை உணர்ந்து நாம் தொழிலாற்ற வேண்டும். என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/108&oldid=1400121" இலிருந்து மீள்விக்கப்பட்டது