பக்கம்:தொழில் வளம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாட்சி (Management)

107


cess) முடிவுப் பொருள்களாக மாற்றி அமைக்க வேண்டிய இயந்திரங்கள், அவ்வியந்திரங்களை எவ்விடத்தில் எம் முறையில் பொருத்தினால் பொருள், இடம், காலம், முதலியன வீணாகாமல் இருக்கும் என்பது, செய்முறையின்போது பொருள்களைக் கையாள உதவும் கருவிகளைத் தேர்ந்தெடுத்தல், முடிவுப்பொருள்களின் முடிவான உருவப்படங்கள் தயாரிப்பது, ஒவ்வொரு இயந்திரத்திலும் எந்த வகையான கருவிகளைக் கொண்டு எம்முறையில் செய்ய வேண்டும், எந்த விதத்தில் பொருள்களை உற்பத்தி செய்வது, செய்தபின் அவைகளின் விலைகளை நிர்ணயிப்பது, செய்பவர்களின் கூலி, அவர்களுக்கான நலந்தரு வசதிகள் (welfare), விற்பனைக்கான வசதிகள் ஏற்படுத்துவது, விற்றபின் வாங்கியவர்களுக்கு உதவியளித்தல் முதலானவைகள் மேலாட்சியின் செயல்கள், அல்லது பொறுப்புகள் வகையில் சேர்க்கப்பட வேண்டியவைகளாகும்.

ஓர் இருவர் உள்ள சிறு தொழிற்சாலையில் இவையெல்லாவற்றையும் அவர்களே செய்தாக வேண்டி இருக்கின்றது. அவர்களே மூலப்பொருள்களை வாங்க வேண்டும். வாங்கிய பின்பு அவைகளைப் பரிசீலனை செய்தாக வேண்டும். செய்த பின்பு ஓர் இடத்தில், வைத்து அன்றன்று செய்யவேண்டிய அளவைப் பிரித்து எடுக்க வேண்டும். அவைகளைச் செய்ய வேணடிய கருவிகளையும் இயந்திரங்களையும் அவை இருக்கும் இடங்களையும் சுத்தம் செய்யவேண்டும். பின்பு மூலப் பொருள்களை, அவைகளின் உதவி, கொண்டு வேலை செய்து முடிவுப் பொருள்களாகச் செய்ய வேண்டும். செய்தபின் அவைகளை முறைப்படி உறையிலோ அல்லது பெட்டியிலோ இட்டு விற்பனை செய்தாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/110&oldid=1382285" இலிருந்து மீள்விக்கப்பட்டது