பக்கம்:தொழில் வளம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

தொழில் வளம்


வேண்டும். இப்படி எல்லாச் செயல்களையும் ஒன்றன் பின் ஒன்றாய் அவ்வோர் இருவரே செய்தாக வேண்டி வருகின்றது. ஆனால் பெரிய தொழிற்சாலைகளில் மேலே கூறப்பட்ட செயல்கள் எல்லாவற்றையும் ஒருவரோஅல்லது இருவரோ செய்துமுடிக்க இயலாது. காரணம், வாங்கும் மூலப்பொருள்கள் அவைகளின் செய்முறைக்கு வேண்டிய வசதிகள், ஆட்கள், முடிவுப் பொருள் இவைகளின் எண்ணிக்கையும், அளவும் மிகப் பெரியதாக இருபப்தே, ஆகையால் ஒவ்வெரு செயலுக்கும் பொறுப்பாக தனித்தனி ஆட்களையோ அல்லது பிரிவையோ அந்தந்தத் தொழிற்சாலையின் அளவைப் பொறுத்து அமைக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

ஆகையால் மேலாட்சியின் செயல்களும், பொறுப்புக்களும் யாண்டும்.ஒரேமாதிரியாக இருந்தபோதிலும், இந்த இரண்டு வகைத் தொழிற் சாலைகளிலும் அவைகள் தொழிற்படும், வகைகள் அனைத்தும் நின்றய மாறுபட்டு இருக்கும் என நாம் அறிகிறோம். சிறு தொழிலிலே ஒருவரே முதலாளியும் தொழிலாளியுமாய் இருக்கும் போது அவருக்குள்ள கருத்து, நிறையச் செய்து நிறையப்பணம் ஈட்ட வேண்டும், செலவுகளையும் விரயங்களையும் குறைக்க வேண்டும் என்ற எண்ணம். மேலோங்கி நின்று, தன்னால் இயன்ற அளவு வருந்தி வேலை செய்வதே. ஆனால் பெரும் தொழிற் சாலைகளிலோ முதலீடு செய்தவர் ஒருவர், வேலை செய்பவர் ஒருவர். அதற்குண்டான வசதிகளைச் செய்து தருபவர் ஒருவர். செய்து முடித்த பொருள்களை விற்பவர் ஒருவர் இப்படியாகப் புலப்பல வேலைகளுக்கு என்று தனித்தனியானவர்கள் இருக்கும்போது, ஒருவரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/111&oldid=1400122" இலிருந்து மீள்விக்கப்பட்டது