பக்கம்:தொழில் வளம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாட்சி (Management)

109


பார்க்கும் தொழிற்சாலையில் நடக்கும் செயல்களைப் போல் அவ்வளவு துரிதமாகவும் வீண் இல்லாமலும் பெரிய தொழிற்சாலைகளில் நடத்த இயலுவதில்லை. நிறுவனத்தின் முதலாளி அல்லது பணம், முதலீடு செய்தவர் நினைக்கும் அளவிற்கு அவருக்குக் கீழே உள்ள மற்ற எல்லோரும் செயலாற்ற முடிவதில்லை. இதற்குக் காரணம் என்ன?.ஒரு நாட்டின் வளம் அந் நாட்டில் உள்ள பலதரப்பட்ட தொழிற்கூடங்கள் மற்ற எல்லாவித செயற்கூடங்களின் செயல்பாட்டைப் பொறுத்துத்தான் இருக்கும். அப்படி அந்த நாட்டு மூலதனங்கள் எல்லாம் பெரிய பெரிய தொழிற்சாலைகளில் முதலீடு (invest) செய்து நடத்தும்போது முன்னமே கூறியவாறு முதலீடு செய்தவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு அவருக்குக் கீழ் அந்த நிர்வாகத்தில் இடம் பெற்று உள்ளவர்கள் முழு அளவில் செயல்படுத்த முடியாதபடி நடக்குமாயின் நாட்டின் மொத்த உற்பத்தித் திறன் தானே குறைகிறது. பெரிய தொழிற்சாலையில் உழைப்பவர்கள் சிறு தொழிற்சாலைகளில் உழைப்பவர்களைப் போன்று முழு அளவில் எல்லா வசதிகளையும் பயன்படுத்த முடியாத நிலை உண்டாகக் காரணம் என்ன? ஏன் இந்தக் குறைபாடு உண்டாகின்றது. இக் கேள்விகளுக்குப் பலர் பலவிதமான காரணங்கள் காட்டுவார்கள். குறிப்பாகப் பார்க்கின் முக்கிய காரணம் ஒவ்வொரு தொழிற் சாலையையும் நடத்தும், மேலாட்சியே என்பது நன்கு விளங்கும். மேலாட்சியில் உள்ளோர் நல்ல உயர்ந்த் மேலாளும் கல்வி அறிவும், நெடுநாள் அனுபவமும், புெற்றவர்களாக இருப்பார்களாயின் அந்த நிறுவனம் நல்ல முறையில் நடக்கும் என்பதில் ஐயமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/112&oldid=1400123" இலிருந்து மீள்விக்கப்பட்டது