பக்கம்:தொழில் வளம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

தொழில் வளம்



ஆகவே, நாம் மற்ற அம்சங்களைப் பார்க்குமுன் மேலாட்சி என்பது என்ன? அதற்குத் தேவையானவை யாவை? அதற்கு எத்தகைய தரம் வேண்டும்? அதன் பொறுப்பு என்ன? என்பன போன்றவைகளைப் பற்றிச் சிறிது சிந்திப்பது மிகமிக அவசியமாகும். தொழில் வளர்ச்சியில் மேம்பாடடைந்துள்ள மேலை நாட்டினர் பலர் இம் மேலாட்சியைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்துள்ளனர். பலரும் பலவித கருத்தைத் தெரிவித்து உள்ளனர். அவற்றுள் சிலவற்றைப் பற்றி எண்ணிப் பார்ப்பது மிகவும் பயன் தருவதாக அமையும்.

மேலாட்சி என்பது தங்களுக்குக் கீழுள்ளவர்கள் தாங்கள் விரும்புவதைத் தாங்கள் விரும்பும் வழியிலே குறித்த நேரத்தில் குறித்தபடி தவறாது முடிக்க வகை செய்து, தாங்களும் மற்றவர்களும் அச்செயலுக்குஉரிய பலனடைவதாகும் என்பர் சிலர். வேறு சிலர்,மேலாட்சி என்பது தாங்கள், நடத்தும் நிறுவனம் என்றும் நிலையாக இருந்து வியாபாரத்தில் மற்றவருடன் போட்டியிட்டு எப்பொழுதும் இலாபகரமாக நடத்திவைப்பதே என்றும் கருதுகின்றனர். எப்படியாயினும் இரு கருத்துக்களையும் ஒன்று சேர்த்துப் பார்ப்பதும் நன்றாகவே அமையும். மற்று வேறொருவகை. இதைவிட ஒருபடி மேலே செல்கிறது. மேலாட்சியின் கடமை அந்த நிறுவனத்தை முன்னவர் விவரித்தபடி நன்கு நடத்தி, அதற்கு முதலீடு செய்தவர்களுக்குத் தக்க வருமானம் வரும்படி செய்யவும், அவ் வருமானம் வருவதற்கு வேண்டிய உழைப்பைக் கொடுப்பவருக் கெல்லாம் நல்ல ஊதியம் கொடுத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், நிறுவனத்தில் உற்பத்தித் திறன் உயர்த்தி விரயங்களைக் குறைத்து அதன் விளைவால் உற்பத்திச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/113&oldid=1382251" இலிருந்து மீள்விக்கப்பட்டது