பக்கம்:தொழில் வளம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாட்சி (Management)

111



செலவைக் குறைக்கவும், குறித்த நேரத்தில் குறித்த படி நுகருபவர்களுக்குக் (Consumers) குறைந்த விலையில் கொடுத்து அவர்களுக்கு வாங்கும் திறனை அதிகப்படுத்தவும், வெளிநாட்டவருடன் போட்டியிட்டு நாட்டின் பொருளாதாரம், வாழ்க்கை நிலை இவற்றை மென் மேலும் உயர்த்தவும் தகுந்த முறைகளைக் கையாண்டு இதே நிலைமைகளை வருங்காலத்திலும் நிலை நிறுத்தி நிறுவனத்தை நன் முறையில் நடத்தத் தகுதி வாய்ந்த, வருங்கால தகுந்த மேலதிகாரிகளைப் பயிற்றுவிப்பதும் போன்றன என்றும் குறித்துள்ளார்கள். இதிலிருந்து மேலாட்சி ஒவ்வொரு நிறுவனத்திலும் நாட்டின் வருங்காலத்தைச் செழிப்புறச் செய்ய எவவளவு கடமைப் பட்டுள்ளது என்றும் நன்கு விளங்குகின்றது. வேறு ஒரு சிலர் மேற்கூறியன் யாவும் மேலாட்சியின் கடமைகளாகவும் பொறுப்புகளாகவும் ஆகும் என்றும், அவைகளே அடைய முக்கியமாக உயர் மேலாட்சியில் (Top Management) உள்ள ஒவ்வொருவரும் அந்தந்த நிறுவனத்தில் உள்ள உறுப்பினர், அலுவலர்கள், உழைப்பைக் கொடுக்கும் தொழிலாள்ர்கள் எல்லோரிடத்தும் நன்கு பழகி, ஒருவருக்கொருவர் நல்லெண்ணத்துடனும் நம்பிக்கையுடனும் மனம்விட்டுப் பழகும் நிலையைக் உண்டாக்க முயல வேண்டும் என்றும் கருதுகின்றனர். இவ்வாறு மேலை நாடுகளில் ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொருவர் கூறுவது நல்லதாகவும் அவசியமாகவும் இருப்பினும் நம் காட்டின் தேவையையும் பிற்போக்கான நிலையையும் பார்க்கும் போது எல்லா வகைகளும் நமக்கு அவசியம் என்பது நன்கு புலனகிறது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/114&oldid=1400124" இலிருந்து மீள்விக்கப்பட்டது