பக்கம்:தொழில் வளம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

தொழில் வளம்



ஒரு நாட்டின், முற்போக்கையும் மற்றப் பலவித முன்னேற்றங்களையும் கட்டுப்படுத்தும் இந்த மேலாட்சியைப் பற்றி நாம் சிறிது விளக்கமாக ஆழ்ந்து பார்ப்பது நல்லது இவற்றிற்குத் தேவையானதுயாது: அவைகள் தங்கள் நோக்கத்தையும் வசதிகளையும் (resources) என்னென்ன வழிகளில் எவ்வெவ்வாறு செலுத்த வேண்டும்? அவற்றால் உண்டாகும் பலன்கள் என்னென்ன என்பவற்றைக் கீழே காண்போம்.

மேலாட்சி என்பது முக்கியமாக மக்களை வைத்து நிர்வகிப்பது,என்ற வகையில் அது மனிதர்களுடன் பழகும் கலை (Art) என்று கொள்ளத்தக்கது. ஆனால் மேலாட்சியை வெறும் தனிவேலை (job) என்ற கருத்தை - நோக்கும் போது மிகமிகச் சிக்கலான தொழில் நுணுக்க இயலாக (Tchnical science) ‘ அமைகிறது. ஆயினும் முன்னதே மிக மேலோங்கி நிற்கிறது. இவை களை அலசிப்பார்க்கும்போது தலைமை வகிக்கும் தன்மைதான் (leadership) மிக மிக அவசியநிலையாகப் புலப்படுகிறது. அது மீட்டும் இன்றி மேலாட்சிக்குத் தேவையான பண்பு நலன்களைப் (Qualities) பற்றி உலகில் பழக்கத்தில் எந்த விதமான வரையறுத்த விதிகளும் கிடையாது. இவ்வகைய விதிகள் ஏதாவது - இருக்கின்றனவா என்று எதிர்பார்ப்பவர்கள் வம்பைத் தான் விலைக்கு வாங்குகிறார்கள் என்பதை நன்கு அறிய வேண்டும். மேலாட்சியினருக்கு ஏற்படும் சூழ்நிலைகளும், சந்தர்ப்பங்களும் ஒரே மாதிரியாக இருப்பதே இல்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வகையில் புதியதாகவே இருக்கும். அந்தச் சந்தர்ப்பத்தையும் சூழ்நிலையையும் கருதி!அதற்குத்தகுந்தாற் போல் வளைந்து கொடுத்துச் சமாளிப்பதே மேலாட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/115&oldid=1400125" இலிருந்து மீள்விக்கப்பட்டது