பக்கம்:தொழில் வளம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாட்சி(Management)

113



யின் உயர்ந்த தன்மையையும், மனிதத் தன்மைக்குக் கொடுக்கும் மதிப்பையும் எடுத்துக் காட்டுவதாகும். வளைந்து கொடுக்கும் தன்மையற்ற மேலாட்சி என்றும் வெற்றிகரமாகச் செயல்படாது என்பது திண்ணம். எப்படியாயினும் மேலாட்சியில் பொறுப்பேற்று இருப்பவர்களும் அதன் ஆட்சிக்குட்பட்டு இருந்து செயலாற்றும் செயலாலரும் கலந்து சந்தர்ப்பச் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு எந்தவித ஆய்வுகள் நலன் அளிக்கும் என முடிவுக்கு வருவதுதான்.நல்லது.

உயர்ந்த வகையில் மேலாட்சி நடக்க வேண்டுமாயின் நிர்வாகத்தில் உள்ளவர் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைப் பற்றி ஐயம் ஏதும் இன்றித்தெள்ளத் தெளிவாக நினைத்து அறியும் தன்மை பெற்றவராகவும், தம்முடைய தொழிற்கூடத்தில் நடக்கும் வேலைகளைப் பற்றிய தொழில் நுணுக்கங்களை நன்கு மற்றவருக்கு எளிதில் அவை பற்றி எடுத்துக் கூறக்கூடியவராகவும்.இவை மட்டும் இன்றி மிகவும் மேன்மையான குணம் படைத்தவராகவும், நேர்மையான ஒழுங்குள்ளவராகவும், தன்னடக்கம் உள்ளவராகவும், எளிதில் மற்றவரைப் புரிந்து கொள்பவராகவும், மற்றவரை மனிதர் எனக்கருதி நன்கு கடந்து கொள்பவராகவும், மற்றும், முக்கியமாகத் தலைமை தாங்கும் தன்மை நிறைந்தவராகவும் இருக்க வேண்டுவது அவசியம். இவையாவும் ஒருங்கே பெற்ற ஓர் அலுவலர் இருப்பாரா என்று பார்க்கும் போது மிகவும் கடினமாகத்தான் இருக்கிறது. அப்படியாயின் நாட்டில் உள்ள அவ்வளவு தொழிற் கூடங்களிலும் மேலாட்சி நடப்பது எப்படி என்ற ஐயம் உடன், உண்டாகத்தான் செய்கிறது. மேலாட்சியினரும் மனிதர்கள் தாம் என்று

8 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/116&oldid=1400126" இலிருந்து மீள்விக்கப்பட்டது