பக்கம்:தொழில் வளம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

தொழில் வளம்


ண்ணும் பொழுது அவர்கள் குற்ற மற்றவர்களாகவோ அல்லது குறையற்ற வர்களாகவோ இருக்கமுடியாது என்பதும் உடன் தோன்றுகிறது. மேலாட்சியில் இருப்பவர்கள் எவ்வளவுதான் திறமை பெற்றவர்களாக இருப்பினும் அவர்கள் ஓர் அளவேனும் தங்களே நாடிவருபவரின் துன்பங்களை மனிதத்தன்மையுடன் கூர்ந்து நோக்கி நிலைமையைச் சீர்தூக்கிப் பார்க்கத் தவறினால் அவர்கள் நீண்ட நாட்கள், அந்தத் தொழிலகத்தை நம்பி, இருந்து, வேலையாற்றும் செயலாளர்களுடன் மனநிறைவுடன் செயல்பட இயலாது என்பதை நன்குஅறியவேண்டும். இத்தகைய நிலைகளில் மேலாட்சியில் இருப்பவர்கள் பலவிதத் துன்பங்களுக்கும், சிக்கல்களுக்கும், அதிர்ச்சிக்கும், நிலையற்ற தன் மைகளுக்கும் உட்பட வேண்டித்தான் வரும். இச்சமயங்களில் மனம் சிறிதும் தளராது நின்று தங்களுடைய தலைமை தாங்கும் திறமையிலுைம், உள்ளத்தில் உள்ள அன்பினாலும், எல்லாம் இனிதே முடியும் என்ற நம்பிக்கையினாலும் சூழ்நிலையைக் கட்டுப்படுத்திக்கொண்டு வருபவரே இந்த நிலைக்குத் தகுதியானவர்.

இவ்வளவு தகுதிகளையும் ஒரு நிர்வாகி அடைய வேண்டுமாயின் முதன்முதலில் அவருக்கு வேண்டியது அமைதியான நற்பண்பும், நிலையைப் பற்றி ஆழ்ந்து தெளிவாகச் சிந்திக்கக் கூடியதன்மையுமே ஆகும். இவை இருப்பின் மற்றவை அடுத்தடுத்து உண்டாவது திண்ணம். குழம்பிய மனதுடையவரால் அவ்விடத்தில் வெறுங்குழப்பமே உண்டாகும் என்பதில் ஐயமில்லை. மேலாட்சியினரின் செயலாற்றும் திறன் அன்றன்று ஏற்படும் சிக்கல்களுக்கு அவ்வப்போது முடிவான தீர்மானம் செய்வதைப்பொறுத்து இருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/117&oldid=1400127" இலிருந்து மீள்விக்கப்பட்டது