பக்கம்:தொழில் வளம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாட்சி (Management)

115



பிரதி பலன்கள் இந்தத் தீர்மானங்களைப் பொறுத்தே அமையும். ஆழ்ந்த, தெளிந்த சிந்தனை, செய்ய இயலாதவரால் என்றும்.எந்தச் சூழ்நிலையைப் பற்றியும் எவ்விதமான முடிவும் செய்ய முடியாமல் நிலைமையை மேலும் மோசமாக்க இடமுண்டு. இவ்வரும் பண்பு. அடைய வேண்டுமாயின் அவரவர் முதன்முதலில் தம் மனத்தை ஒரு நிலைக்குக் கொண்டுவந்து கட்டுப்படுத்த முயல வேண்டும். இக்கட்டுப்படுத்தும் தன்மையை நெடுநாள் கடினப் பயிற்சிக்குப் பின்பே அடைய முடியும். இச்சீரிய பொறுப்பேற்கும் ஒவ்வொருவரும் தங்களை இவ் வழிக்குட்படுத்திக்கொண்டே ஆக வேண்டும்.

எந்த ஒரு நிறுவனத்தில் தெளிவற்ற நிலைமை, உத்தரவுகள், தாமதமான நடவடிக்கை முதலியன இருந்து வருகின்றதோ, அவை அந்த நிறுவனத்தின் மேலாட்சியில் உள்ளவர்கள் தெளிவான சிந்தனை உள்ளம் அற்றவர் என்பதை உடனே காட்டுகின்றன. இந்நிலைக்குக் காரணம் என்ன என்பதை முக்கியமாக மேலாட்சியினர் நன்கு ஆராய்ந்தறியாததே ஆகும்.ஒரு மேலாட்சியில் உள்ள நிர்வாகிக்கு ஆழ்ந்த அறிவு நிறையவேண்டும் என்பது கிடையாது. ஆனல் அவருக்கு உடனடியாக மிகமிக அத்தியாவசியமானது, தான் அந்த இடத்தில் இருந்துகொண்டு அந்தத் தொழிலகத்துக்குச் செய்ய வேண்டியது என்ன என்பதை தெள்ளத் தெளிய அவர் புரிந்து கொள்ள வேண்டுவதே. அதை அவர் மனத்தில் இருத்தி நினைத்துப் பார்ப்பாரேயானல் நிலைமை அவருக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும். அதன் பலனாக ஒவ்வொருவருக்கும் அவர் இன்ன இன்னதை இப்படி இப்படிச் செய்யவேண்டும் என்று தெளிவாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/118&oldid=1400128" இலிருந்து மீள்விக்கப்பட்டது