பக்கம்:தொழில் வளம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

தொழில் வளம்



ஐயகமறக் கூற வகையுண்டு. இவ்வாறு மேலாட்சியின் குறிக்கோளை அறிந்து கொள்ளாமல் இருக்கும் வரை அந்த நிர்வாகியிடம் இருந்து தெளிவான உத் தரவுகளும், அவரின் கீழ் வேலை பார்க்கும் மற்றவர்கள் தாம் தாம் என்ன செய்ய வேண்டும் என்று அறிவதும் இல்லாதனவாக அமையும்.தங்களுக்கு மேல் உள்ளவர் கள் தங்களிடம் கூறியது ஒன்றும் புரியவில்லை என்றும், தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் விளக்கமாகக் கூறவில்லையே என்றும், மேலாட்சியினரின் நோக்கம் என்ன என்றே அறியக் கூட முடியவில்லையே என்றும் கூறுவது சர்வ சாதாரணமானதாகிவிட்டது. இந்நிலைக்குக் காரணம் ஆழந்து சிந்திக்கும் சக்தி மேலிடத்தில் குறைந்துள்ளதே ஆகும். பொது வாழ்க்கைக்கும் இவ்வாறு சிந்திக்கும் தன்மையே மிகமிக அவசியமானது. நாம் கற்கும் கல்வியின் உயர்ந்த குறிக்கோளாக அமைய வேண்டியது, எப்படி ஒரு சூழ்நிலையைப் பற்றி ஆழ்ந்து தெளிவாகச் சிந்திப்பது என்ப்தை அறிய மனதைப் பக்குவப் படுத்துதலே ஆகும். சிந்திப்பது மட்டும் இன்றி மேலாட்சியில் உள்ளவர், மனதில் உள்ளதை மற்றவர்களுக்கு நன்கு புரியவைக்கவும், தம் கீழ் உள்ளவரின் நிலையையும் துன்பங்களையும் ஆராய்ந்து தெளிவாக அறியவும் வல்லவராய் இருத்தல் வேண்டும். அறிவிப்புத்தன்மைக் (communication). குறைவினால் நாட்டிற்கே பெருத்த நட்டமும் உண்டாக வழியுண்டு. இதற்குச் சான்றாக தொழிற் துறையிலும் மற்றத் துறைகளிலும் மேம்பாட்டைந்துள்ள ஆங்கில நாட்டில் ஒரு தொழிலகத்தில் நடத்தப்பட்ட ஒரு கணக்கின் (survey) செய்தியை அந்நாட்டு மான்செஸ்ட்ர் பல்கலைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/119&oldid=1400129" இலிருந்து மீள்விக்கப்பட்டது