பக்கம்:தொழில் வளம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாட்சி(Management)

117



கழகப்பேராசிரியர் திருR.w. ரெவான்ஸ்(RWRevans) கூறியிருப்பதைக் காணலாம்.

ஒரு தொழிலகத்தில் உள்ளவர் அனைவரும் நான்கு தரங்களில் பொருத்தப்பட்டுள்ளனர். அதாவது உயர் மேலாட்சியாளர் - மேலாட்சியினர் - மேஸ்திரிகள்தொழிலாளர்கள். இவர்களைப் பேட்டி கண்டு இவர்களின் எண்ணங்களை ஆராய்ந்து பார்த்தபோது தனித்தனிப் பிரிவுகளில்.வேலை செய்யும் தொழிலாளர்களில் நூற்றுக்கு இருபத்தெட்டுப் பேர் மட்டுமே. தங்கள் குறைகளைத் தங்களுக்கு மேல் உள்ள மேஸ்திரிகள் அறிவாளர்கள் என நம்பினர்கள்.

மேஸ்திரிகளை நேரில் கண்டு முடிவை ஆய்ந்த் போது இவர்களில் நூற்றுக்கு எண்பத்தெட்டு பேர் தாங்கள் தங்களுக்குக் கீழேவேலை செய்யும் தொழிலாளர்கள் அனைவரின் துன்பங்களையும் குறைகளையும் தாங்கள் நன்கு அறிந்திருப்பதாகத் தெரிந்தது.

ஆனல் இதே மேஸ்திரிகளில் நூற்றுக்கு நாற்பத்து மூன்று பேர்கள்தாம் அவர்களின் துன்பங்களையும் குறைபாடுகளையும். தங்களுக்கு மேல் உள்ள மேலாட்சியினர் அறிவார்கள் என நம்பினர்கள்.

அம் மேலாட்சியினர் வகையை நேரில் கண்டு. முடிவை ஆராய்ந்த போது இவர்களில் தொண்ணுாற்று நான்கு பேர்கள் தங்கள் கீழ் உள்ள மேஸ்திரிகளுக்குத் தேவையானவற்றைத் தாம் முழுதும் அறிவதாகத் தெரிவித்தார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/120&oldid=1400130" இலிருந்து மீள்விக்கப்பட்டது