பக்கம்:தொழில் வளம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

தொழில் வளம்



ஆனால், இம் மேலாட்சியினரிலேயே நூற்றுக்கு ஐம்பத்தொன்பது பேர்கள்தாம் தங்கள் குறைகளைத் தங்களுக்குமேல் உள்ள உயர்மேலாட்சியினர் அறிய வகையுண்டு என்று கருதினர்.

ஆக, படிப்படியாக பார்க்கும் போதுதான் எவ்வளவு தூரம் ஒவ்வொரு பகுதியில் வேலை செய்யும் தொழிலாளர்களின் குறைகள் உயர் மேலாட்சிக்கும், உயர் மேலாட்சியின் கருத்துக்களும் குறிக்கோள்களும் எந்த அளவுக்குத் தொழிலாளர்களுக்கும் தெரிகிறதென்பதும் நன்கு புலனாகின்றன. மேம்பாடு அடைந்த நாடு களிலேயே இந்த இருபதாம் நூற்றாண்டில் இப்படி இருந்தால், நம் நாட்டில், உயர் மேலாட்சிக்கும் தொழிலாளருக்கும் இடையே உணர்த்தும் நிலை உணரும் நிலை இவை பற்றி நாம் எண்ணிப் பார்க்கக்கூட முடியாதுதான்.

இவைபோன்ற நிலைமை இருந்து வருவதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, தொழிலகத்தில் உள்ள ஒவ்வொரு தொழிலாளியும் அனைவருடன் இருந்து சமத்துவமாக உழைப்பைக் கொடுத்துத் தொழிற்சாலையின் வெற்றிக்குப் பாடுபட்டு வரும் பங்காளிகள் என்பதை ஏற்றுக் கொள்ளாதது. இரண்டாவது, உயர் மேலாட்சியில் இருப்பவர் தம்கீழ் உள்ள மேலாட்சியினர். தொழிலாளர்களின் குறைகளையும் அவர்களின் நலன் மற்றும் இதர பிரச்சனைகளையும் கவனித்து, அவர்கள் தாம்.நினைக்கின்றபடி செயலாற்றுவர் என்று எண்ணி அதிகக் கவனம் செலுத்தாமல் விட்டுவிடுவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/121&oldid=1400131" இலிருந்து மீள்விக்கப்பட்டது