பக்கம்:தொழில் வளம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாட்சி(Management)

119



கடந்த சில ஆண்டுகளாகத்தான்.எல்லோரும் உற்பத்தித் திறன், வாழ்க்கைத் தரம் இவைகளைப் பற்றி அக்கறை கொண்டுள்ளதுபோல் விஞ்ஞான ரீதியான மேலாட்சியைப் பற்றியும் சிந்தித்து ஆராய்ந்தறியத் தலைப்பட்டுள்ளனர். இதன் அவசியத்தை உணர நான்கு முக்கிய காரணங்கள் உள்ளன எனக் காட்டலாம். முதற் காரணம் எல்லா விஞ்ஞானங்களைப் போல் உளவியல் (Psychology) மனித வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற ஆரம்பித்துள்ளதும், அதனல் மனித உறவு வளர்ந்து வருவதும் ஆகும். இரண்டாவதாக இந்த உளவியல் என்னும் விஞ்ஞானத்தை, பெரும் அளவில் தொழிலாளர்கள் வேலை செய்யும் தொழிற். சாலைகளில் புகுத்துவதாகும். முன்றாவதாக, இந்த இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகு இயந்திரங்களை விட மனிதர்களுக்குப் பெருத்த அளவில் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டு இருப்பது. இவை யெல்லாவற்றையும்விட மிக முக்கியமானது மேலாட்சியினர் தொழிலாளர் உறவை’ என்றென்றும் பயன் அளிக்கவல்ல நல்லுறவாகப் பிணைக்கவும், தொழிலாளர்களுக்கு எல்லாவகையிலும் சமத்துவமும் வசதிகளும் பெறவும் அமைந்த ஒழுங்கான தொழிற்சங்கங்களின் (Trade union) முன்னேற்றமும் குறிக்கோள்களுமாகும். இதை யாரும் மறுக்க முடியாது. மேற்கூறிய இக் காரணங்களால் மேலாட்சியானது மிகவும் உயர்ந்த முறையிலும் விஞ்ஞான வழியிலும் செயல்படாவிடில் பலவித இன்னல்கள் உண்டாகும் என்பது சொல்லாமலே விளங்குகிறது. உளவியல்’ எனும் விஞ்ஞானத்துக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ள்து என்பது உண்மையென்றலும் மற்ற எல்லா விஞ்ஞானங்களிலும் நாம் முன்னேறி உள்ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/122&oldid=1400132" இலிருந்து மீள்விக்கப்பட்டது