பக்கம்:தொழில் வளம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

தொழில் வளம்



அளவிற்கு இதில் நாம் முன்னேறவில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. மனித தத்துவத்தையும் மனிதன் எவ்வாறு ஒவ்வொரு சூழ்நிலைக்கும் மாறி நடப்பான் (React) என்று உறுதியாக மற்ற விஞ்ஞானங்களைப் போல் கணக்கிட்டுச் சொல்லவே முடியாது. உண்மையில் மற்ற விஞ்ஞானங்களில் முன்னேற்றம் அடைந்து சந்திர மண்டலத்துக்குச் செல்வது இன்றாே நாளையோ என்று இருக்கும்போது, இந்த, ஒரு விஞ்ஞானத்தில் நாம், இப்போது அடைந்திருக்கும். நிலைமை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பின்தங்கியது என்று கூறுவதில் தவறேதும் இல்லை ம்னிதனைப் பற்றி மனிதன் அறியும் நிலைமை இப்படி இருக்க எவரும் இந்தந்த நிலைகளில் இவ்வாறுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று கணக்கிட்டுக் கூற முடியாது. இவைகளைப் பற்றிச் சொல்லவும் கூட அனு பவமும், ஆற்றலும் தேவையான அளவு வளரவில்லை இதனாலேயே மேலைநாடுகளில் தொழிற்கூடங்களில் பலவகைப்பட்ட ஆய்வுகளைப் பல உளவியல் நிபுணர்கள் தீவிரமாய் ஆராய்ந்து வருகிறார்கள். உயர் மேலாட்சியினர், தம்கீழ் உள்ள நிர்வாகிகளுக்கு எவ்வித அதிகாரமும் ஆட்சியும் கொடுத்தாலும், மனித உறவு பற்றிய நிலைகளை அவ்ர்களிடம் விடாமல் தாங்களே முழு அளவில் கையாள வேண்டும் என்று மேலை நாட்டுப் பெரிய தொழிலதிப்ர் சர். பிரடெரிக் கூப்பர் (Sir Fredrick"Cooper) என்பவர் கூறியுள்ளார் . மேலும் அவர் மேலாட்சியினரின் குறிக்கோள்களும், செயல்களும், எவ்வாறு நாட்டின் முன்னேற்றத்துக்காக அமையவேண்டும் என்று விளக்கும் இடத்தில் கூறியிருப்பதாவது:-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/123&oldid=1400135" இலிருந்து மீள்விக்கப்பட்டது