பக்கம்:தொழில் வளம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாட்சி(Management)

121



தான், மக்கள் முழு நிறைவோடு கூடிய வாழ்க்கையை அவர்கள் இரண்டே இரண்டு நிலைகளில்தான் வாழ்ந்து அனுபவிக்க முடியும் என்று:நம்புவதாகவும், அதில் முதலாவது நாட்டில் உள்ள மக்கள் பெரும்பாலோர் படியாத மூடர்களாகவும் அப்பாவிகளாகவும் இருந்து, நல்ல கல்வியறிவும்,நேர்மையும்,தியாக உணர்வும், நாட்டுப்பற்றும், ஆழ்ந்த சிந்தனையுள்ளமும், திறம்படத் தலைமை தாங்கும் திறமையும் இன்ன பல அரிய ஆற்றல்களைப் பெற்ற சிறுபான்மையோரால் வழிகாட்டப்படுவதும் ஆகும். இரண்டாவது நாட்டில் உள்ள அனைவரும் பெரும் மேதைகளாக இருந்து கல்வி, ஞானம், நேர்மை எல்லாம் பெற்றுவாழ்க்கையை எவ்வாறு தாங்கள் தனித்தனியே வாழ்ந்து அனுபவிப்பது என்பதை முற்றும் கற்றறிந்து நடந்து கொள்ளும் நிலை -என்றும் கூறியுள்ளார். ஆனால், இப்போது நாம் வாழ்ந்து வருவது மேற்கூறிய அந்த இரண்டும் அல்லாமல் இரண்டுக்கும் இடையே இருந்து அவதியடைந்து வருவதாகும். இந்த நிலையில் இருந்து மீள வேண்டுமாயின் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்வதும், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் உழைப்பை அளித்து உற்பத்தியை ஏற்படுத்தும் இடமுமாகிய தொழிற்சாலைகளின் மேலாட்சியினரும் தொழிலாளரும் உடன் விழிப்புக்கொண்டு நாட்டின் நலம் கருதி நல்ல விஞ்ஞான முறையில் அவைகளை நடத்த உடன் சிந்தனை செய்தல் வேண்டும்

இதுவரை தொழிற்கூடத்தின நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் உயர் மேலாட்சியினருக்குத் தேவையான குணம், பண்பு, அறிவு. முதலானவற்றைக் கண்டோம். பின்வரும் பக்கங்களில், நல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/124&oldid=1400136" இலிருந்து மீள்விக்கப்பட்டது