பக்கம்:தொழில் வளம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

தொழில் வளம்


அனுபவம் வாய்ந்த மேலாட்சியினர் சீரிய முறையில் பணியாளருக்கும், சமூகத்திற்கும், நாட்டுக்கும் நல்ல பலனளிக்கும் வகையில் தொழிற்கூடத்தை நடத்திச் செல்ல உதவும் பல முக்கிய துறைகளில் மிக முக்கிய மானவற்றைப் பற்றி ஒரு சிறிது விரிவாகக் காணலாம். பொதுவாக இவைகளை மேலாட்சியினரின் கருவிகள் (Management Tools) என்று கூறுவர். இத்துறைகள் எவ்வளவுக் கெவ்வளவுதுரிதமாகவும், சரியாக்வும் பணியாற்றுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு தொழிற் கூடம் சிறந்த முறையில் நடைபெறும்.

நமது தொழிற்சாலைகள் நல்ல முறையில் நடக்க வேண்டுமேயானல் நாம் செய்யும் பொருள்கள் எல்லாம். விற்பனை ஆக வேண்டும். பொருள்களை வாங்க வெளியில் நுகர்வோர் (Consumers) வேண்டும். அப்படி வாங்கும் நுகர்வோர் இல்லையாயின் தொழிலகங்களை மூடுவதன்றி வேறு வழியே இல்லை. எந்தவிதமான கட்டுப் பாட்டு நிலையையும் மேற்கொள்ள வேண்டிய அவசியமே வராது. ஆகையால், விற்பனையே ஒரு தொழிலகத்தின் முக்கிய பகுதியாக அமைகின்றது. அதற்குப் பின்னரே மற்றத் துறைகள். உற்பத்திப் பகுதியில் உள்ளோர் எல்லோரும், தாம் செய்வதே முக்கியம் என்றே மற்றவர் கருத வேண்டும் என விரும்புகிறர்கள். அதேபோல விற்பனைத் துறையினரும் விரும்புவது இயல்பே. அவர்களிடம் வரும் ஒரு சில நுகர்வோரை அவர்கள் விரும்பும் பொருள்கள் இல்லை எனச் சொல்லித் திருப்பி அனுப்ப விரும்புவது வழக்கம் இல்லை. எப்படியாயினும் நுகர்வோரின் திருப்தியைக் காணவே விரும்புவர். ஆனல், தொழிற் பகுதியில் உள்ளவரோ பிறருக்காகவோ அல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/125&oldid=1381981" இலிருந்து மீள்விக்கப்பட்டது