பக்கம்:தொழில் வளம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாட்சி(Management)

123




லது தனிப்பட்ட நுகர்வோருக்காகவோ கையாண்டு. வரும் உற்பத்தி முறையிலிருந்து விலகித் தனிப்பட்ட வகையில், சிலருக்காகத் தனிப்பட்ட வசதிகளை அளிக்க முடிவதில்லை. எப்பொழுதும் ஒரேமாதிரியாக எந்தவித மாறுதலுமின்றி வேலைகள் நடக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் பழக்கமான உற்பத்தி முறையைக் கையாண்டால், சிக்கல்கள் ஏதுமின்றிக் குறித்த வகையில் உற்பத்தியை முடிக்க முடியும். பொதுவாக உற்பத்தித் துறையினர் தனிப்பட்ட வகையில் ஒரு சிலருக்காக, வருந்தி வேலை செய்வதை விரும்பாமல் தவிர்ப்பது அவர்களைப் பொறுத்தமட்டில் தவறில்லை என்றே கூறலாம். அப்படித் தனிப்பட்டவர்களுக்காக ஆரம்பிக்கும்போது உற்பத்திச் செலவுகள் அதிகமாகின்றன அதிகமாகும் செலவுகள் சுலபமாக வெளிப்படையாகப் புலப்படாது என்பதையும் இவர்கள் நன்கு அறிவார்கள். அப்படி இருக்க அவர்கள் எப்படி ஒரு சிலருக்காகத் தாம் வருந்த விரும்புவார்கள் ?

அதுமட்டுமின்றி, தயாரிப்பவருக்குத் தங்கள். பழக்கமான வழியைவிட்டு மாறிச் செய்வதனால் உண்டாகும்,செலவுகளை நுகர்வோரிடம் வாங்கினால் உற்பத்திப் பகுதியில் உள்ளவர்கள் செய்ய மறுக்கமாட்டார்கள். அவ்வாறு செய்து தனிப்பட்ட நுகர்வோருக்கு அவர்கள் விரும்பும் வகையில் பொருள்களைத் தயாரித்துக் கொடுக்கையில் அவர்கள் பெருமிதத்துடன் மற்றவருக்குக் காட்டும்போது தம்முடைய தொழிற்சாலையைப் பற்றியும், பொருள்களைப் பற்றியும், விளம்பரம் செய்கிறர்கள். இரண்டாவது அச்சிறப்பு அம்சங்களைப் பொறுத்தித் தருவதனால் மற்றத் தயாரிப்பாளர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/126&oldid=1400137" இலிருந்து மீள்விக்கப்பட்டது