பக்கம்:தொழில் வளம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

தொழில் வளம்



இவ்வகையில் நம்முடன் போட்டியிடுவதும் குறைகிறது. இதனால் இந்தத் தொழிற்சாலைக்கு மொத்தத்தில் இலாபமும் அனுகூலமும் உண்டாவதற்கே வழியுண்டாகிறது என்றும் கருதலாம். மேலும் பொருள்களை விற்கும் கண்ட முதலாளிகள் யாவரும் மற்ற விற்பனையாளரைவிடத் தாம் நுகர்வோர்க்கு அளிக்க நிறையப் பலவகையான-விதவிதமான-பொருள்களைத் தயாராக வைத்திருக்க வேண்டுமென்றே விரும்புகின்றனர்:

உற்பத்தி செய்வோா் விற்பனையாளர் இவர்கள் நிலைமைகள் இப்படி இருக்க, நுகர்வோர் எந்தவிதத்தில் பொருள்களை விரும்புகிறார்கள் ? ஒரு குறிப்பிட்ட தொழிற்கூடத்தில் உற்பத்தியானதையோ, ஒரு குறிப்பிட்ட அமைப்பில் அமைந்ததையோ ஏன் தேடி வாங்க ஆசைப்படுகின்றனர்? இதையும் நாம், சிறிது ஆராய்ந்து பார்ப்பது மிக அவசியமாகப்படுகின்றது. இவ்வகையில், நுகர்வோர் ஒரு பொருளை வாங்குவது என முடிவு செய்யக் காரணமாக அமையும் அடிப்படைகள் (Factors) இரண்டு தலைப்புக்களில் பிரிக்கப்படலாம். அவை 1. உணர்வின் வகை (Emotional) 2. பயன் வகை (Rational) ஆவன. முதல் தலைப்பான உணர்வின் வகையின் காரணங்கள் கீழ் வ்ருவன:-

1. தன்னையறியாமல் உணடாகும் ஏக்கத்தை
   விருப்பத்தைத் தணிப்பது. 
2. வீட்டில் அப் பொருள் இருந்தால் தான் வசதி
   உண்டாகும் என்ற நிலைமை. 
3. அப் பொருளினால் தனக்குத் தொல்லை குறைந்து வசதி பெருகுவது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/127&oldid=1400138" இலிருந்து மீள்விக்கப்பட்டது