பக்கம்:தொழில் வளம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாட்சி (Management)

127


மேலே கூறப்பட்ட இருவகை அடிப்படைகளில் முதல் தலைப்பில் கண்ட காரணங்கள், அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படும் விலை மலிவாக இருக்கும் பொருள்களை வாங்கும் பொழுதுதான் அமைகின்றன. ஆனால், விலை அதிகமுள்ள இயந்திரங்கள், கருவிகள் போன்ற வைகள் வாங்கும்போது, வாங்குபவர்களின் முடிவை உறுதி செய்ய உபயோகப்படுவன, இரண்டாவது தலைப்பில் வருவனவும், மூன்றாவதாகப் பின் விளைவு அடிப்படைகள் (Patronage motives) என்ற தலைப்பின் கீழ் வருவனவும் ஆகும்.

மூன்றாவது தலைப்பின் கீழ் வருவன :—

1. வாங்கிய பின் அப் பொருள்களை நன்றகத் திறம்பட உழைக்க வைக்க உற்பத்தியாளர் அல்லது விற்றவர் உதவி செய்வது.

2. அப்பொருளை உற்பத்தி செய்து விற்பவர்களின் மீது உள்ள நம்பிக்கை, நற்பெயர் முதலியன.

3. உறுதி கூறியபடி தாமதமின்றிப் பொருள்களை உற்பத்தி செய்து கொடுத்தல்.

4. தங்களுக்கு வேண்டிய வகையில், வசதிகளுடன் பொருள்களைத் தயாரித்தோ அல்லது மாற்றி அமைத்தோ கொடுப்பது.

5. பழுதுபடும்போது தாமதமின்றி, உடன் சரிசெய்து, விரயத்தைக் குறைக்க வகையுள்ளது.

6. பல வகைகள், ரகங்கள், அளவுகள் இருப்பதால் தமக்கு உகந்தவகை, ரக, அளவில் பொறுக்கி எடுக்கும் வாய்ப்பு இருப்பது.

7. எந்த இடத்திலும் பொருத்த எளிதாக அமைவது.

8. தவணை முறைக் கடன் வசதிகள் வழியாகப்பொருள்களை அடைவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/130&oldid=1382343" இலிருந்து மீள்விக்கப்பட்டது