பக்கம்:தொழில் வளம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

தொழில் வளம்



9. நம்பிக்கையான உத்திரவாதங்கள்.

10. வாங்குபவருக்கென சிறப்புச் சலுகைகள் அளிப்பது.

இவைகள் யாவும் பெரிதும், வாங்குவோரின் எண்ணங்களைக் கவர்ந்து வாங்க முடிவு செய்ய உதவுகின்றன.

விற்பனை நிலைமை இவ்வாறு இருக்க அந்தத் துறையிலுள்ளவர்களே. முன்னதாகவே வருங்காலத்திற்கு விற்பனை செய்ய வேண்டிய பொருள்களின் தரம், வகை, எண்ணிக்கை முதலானவைகளை முடிவு செய்து சொல்ல வேண்டும் என்று சொல்லும்பொழுது அவர்கள் சிறிது தயங்கவே செய்வார்கள் - செய்கிறார்கள். தாங்கள் எப்படி மற்றவர் உள்ளத்தைக் காண முடியும்? யார் யார், என்ன என்ன, எப்பொழுது, எப்படி வாங்குவார்கள் என யார் கூற முடியும் என்றே நினைக்கின்றனர். உண்மையிலேயே இது பற்றி முடிவு செய்வது கடினமான வேலையே என்பதை எவரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எனினும் பழைய விற்பனையை ஆழ்ந்து ஆராய்ந்தால் ஒர் அளவுக்கு விற்பனையைத் திட்டமிட வழியுண்டு முழு அளவில் நிர்ணயிக்க முடியாவிடினும் ஒர் அளவு நிர்ணயிப்பது பல வழிகளில் இலாபகரமானதாக அமையும். எதிர்பாராத விதத்தில் தேவை ஏற்படும் பொருள்களை உற்பத்திப் பகுதிகளில் உடன் எடுத்துச் செய்து கொடுக்கச் சொல்வதால் பலவிதக் கஷ்டங்களும் நஷ்டங்களுமே உண்டாகும். உதாரணமாக, வேண்டிய மூலப்பொருள்கள் இல்லாமல் இருக்கலாம். அவைகளே உடனடியாய் வாங்குவதனால் கூடுதலான செலவுகள் ஆகும். செய்து கொண்டிருக்கும் பொருள்கள் அந்தந்த நிலையிலேயே விட்டுவைக்க வேண்டி வரும். அவ்வாறு செய்யும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/131&oldid=1400139" இலிருந்து மீள்விக்கப்பட்டது