பக்கம்:தொழில் வளம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாட்சி ( Management)

129


போது, முன்னமேயே செலவு செய்துள்ள முதலீடு தொழிற்சாலைகளிலேயே முடங்கிவிடுகிறது. அதற்கு வட்டியும் அவைகளை வைத்திருக்கும் இடம், செய்து வைத்த அளவிற்கான செலவுகள் யாவும் அப்போதைக்குப் பயனற்றதாகி விடுகின்றன செய்முறைகளில் நிறைய மாறுதல்கள், ஏற்பட்டு, திட்டங்களில் குழப்பம், தாமதம் இவைகளினால் உற்பத்திச் செலவு அதிகமாகவே இத்தகைய இம்மாதிரி செலவு வகைகள் அதிகமாவதைப் பன்மடங்கு குறைக்க ஒரே வழி, கூடுமானவரை சென்ற கால விற்பனையையொட்டியும் சந்தர்ப்பச் சூழ்நிலைகளையொட்டியும் ஓர் அளவிற்கு எதிர் கால விற்பனை அளவை நிர்ணயித்துக் கொண்டு அதற்குத் தகுந்தபடி உற்பத்தித் திட்டங்களை வகுத்துத் தொழிற்கூடத்தை நன்கு நடத்துவதேயாகும். இவ்வாறு பல செலவுகளைத் தவிர்த்து நிலையான சூழ்நிலையை ஏற்படுத்த ஒரு முன்னெச்சரிக்கையாக நிர்ணயிக்க முடியவில்லையெனில் அதற்குச் சில காரணங்கள் உள்ளன. அவைகளில் முக்கியமானவைகள் (1) விற்பனைத் துறையில் உள்ளவரின் சக்திகளையும் திறனையும் திட்டமிட்டு நிறைவேற்றாமை. (2) நல்ல விற்பனைக்காக நேரமே செலவு செய்யாமல் இருப்பது. (3) நல்ல. விற்பனை முறைகள் இல்லாமை. (4) விற்பனை செய்யும் பொருள்களைப் புற்றி நன்கு அறியாமை என்பவைகளாம். இந்தச் சிறு தவறுகளைத் திருத்த முயன்றால் விற்பனைத் துறையின் திறன் நிச்சயம் உயரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. தொழிற்கூடங்களில் உள்ளவர்-என்றும் நுகர்வோர் விரும்புவதைத் தயார் செய்யவே இருக்க வேண்டும். விற்பனை அதிகமாக அதிகமாக உற்பத்திச் செலவுகள் அவ்வளவுக்கவ்வளவு குறைய வழியுண்டு.

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/132&oldid=1400215" இலிருந்து மீள்விக்கப்பட்டது